ஆள் கடத்தல் கும்பலுடன் தி.மு.க.,வினர் தொடர்பு: விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

Updated : ஜூலை 28, 2022 | Added : ஜூலை 28, 2022 | கருத்துகள் (89) | |
Advertisement
கோவை: கோவையில் காப்பகம் என்ற பெயரில், ஆட்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்த சம்பவத்தில், தி.மு.க.,வினருக்கு உள்ள தொடர்பு குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: அரசின் கவனக்குறைவால், தமிழகத்தில் தினமும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: கோவையில் காப்பகம் என்ற பெயரில், ஆட்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்த சம்பவத்தில், தி.மு.க.,வினருக்கு உள்ள தொடர்பு குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.latest tamil newsஇதுதொடர்பாக, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: அரசின் கவனக்குறைவால், தமிழகத்தில் தினமும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் தற்கொலைகள், லாக்-அப் மரணங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது, தி.மு.க., அரசின் மெத்தனப்போக்கையும் திறனற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

கோவை, தொண்டாமுத்துார் அடுத்த அட்டுக்கல் கிராமத்தில், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அரசு அதிகாரிகளால், நான்கு ஆண்டுகளுக்கு முன் 'சீல்' வைக்கப்பட்டது. தி.முக., ஆட்சிக்கு வந்ததும், தொண்டாமுத்துார் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ரவி உதவியுடன், அந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டு, சமீபத்தில் அவரது தலைமையில் திறப்பு விழா நடந்துள்ளது.

'கருணை பயணம்' என்ற காப்பகத்தில் ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும், ஜேக்கப், சைமன், ஜெபின், செந்தில்குமார் ஆகிய நால்வர், இதை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த காப்பகத்தில், 200க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்த அமைப்பினர், சாலையில் நடந்து சென்ற முதியோர்களை வழிமறித்து, வற்புறுத்தி காப்பக வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.


latest tamil newsஇதைக் கண்ட பா.ஜ., தொண்டர்கள், மாவட்ட தலைவர் உத்தம ராமசாமிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறை உதவியோடு, அந்த வாகனத்தை இடைமறித்து, அழைத்துச் செல்லப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் யாரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், வற்புறுத்தி அழைத்துச் சென்று, அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை தீயிட்டு எரித்ததும் தெரியவந்தது. கேள்வி கேட்டவர்களை துன்புறுத்தியுள்ளனர்.

பா.ஜ., தலையிடுவதை அறிந்ததும், 92 பேரை வாகனத்தில் கொண்டு சென்று, கோவையின் பல பகுதிகளில் விடுவித்துள்ளனர். இந்த மோசடிக்கும்பலுக்கும் தி.மு.க.,வுக்கும் உள்ள தொடர்பை, போலீசார் விசாரிக்க வேண்டும். உடல் உறுப்புகளை கடத்தி விற்கும் கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என, விசாரிக்க வேண்டும்.அனுமதியின்றி செயல்படும் இதுபோன்ற காப்பகங்களை ஒழுங்குபடுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (89)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
28-ஜூலை-202215:35:16 IST Report Abuse
Vijay D Ratnam இதற்கு முன் சில வருடங்களுக்கு முன் சென்னை அருகாமையில் இதே போன்ற சம்பவம் நடந்தது. இப்போது கோவையில். மதமாற்ற மாபியாக்கள் செய்யும் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. நெல்லை மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு வீட்டில் ஒரு பாஸ்டர் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய விஷயம் தெரிந்து ஊர்மக்களால் புகாரளிக்கப்பட்டு போலீசில் கையும் மெய்யுமாக சிக்கிக்கொண்ட விஷயமெல்லாம் நடந்தது நினைவுக்கு வருகிறது இதோ இப்போ ஆட்கடத்தல் உடல் உறுப்பு திருட்டு வரை வந்துவிட்டது. இனி வழிப்பறி கொள்ளை கூலிப்படை என்று இறங்குவதற்குள் காவல்துறை இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். அவர்கள் போட்ட பிச்சையில் ஆட்சி நடப்பதால் பேயாட்டம் போடுகிறார்கள்.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
28-ஜூலை-202215:26:12 IST Report Abuse
Raj MLA கடத்தல் யார் செய்ரதுன்னு இந்தியா முழுவதும் தெரியும்.... போய் அமித் சாவுக்கு அட்வைஸ் பண்ணு
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
28-ஜூலை-202215:02:33 IST Report Abuse
Soumya ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X