அமைச்சருக்கு எதிராக உண்ணாவிரதம்: அனுமதி கேட்டு தி.மு.க.,வினர் மனு

Updated : ஜூலை 28, 2022 | Added : ஜூலை 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர்: காங்கயத்தில், அமைச்சர் சாமிநாதனுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு, தி.மு.க.,வினரே போலீசில் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளார். இந்த மாவட்டத்தில், ஒன்றிய செயலாளர் தேர்தலில், அமைச்சர் தரப்பு, இளைஞரணியை சேர்ந்த கருணை பிரகாஷ் என்பவரை, சிதம்பரத்துக்கு எதிராக

திருப்பூர்: காங்கயத்தில், அமைச்சர் சாமிநாதனுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு, தி.மு.க.,வினரே போலீசில் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளார். இந்த மாவட்டத்தில், ஒன்றிய செயலாளர் தேர்தலில், அமைச்சர் தரப்பு, இளைஞரணியை சேர்ந்த கருணை பிரகாஷ் என்பவரை, சிதம்பரத்துக்கு எதிராக களம் இறக்கியுள்ளது. ஆனால், சிதம்பரத்துக்கு ஆதரவாக, கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.



latest tamil news




இதற்கிடையே, காங்கயம் ஒன்றியம், ஊராட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் கட்சி நிர்வாகிகள் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று அளித்த மனுவில், 'காங்கயம் வடக்கு ஒன்றியத்தில் பெரும்பான்மையான கிளை செயலாளர், பிரதிநிதிகள் ஆதரிக்கும் சிதம்பரத்தை புறக்கணித்து விட்டு, வேண்டுமென்றே நிர்வாகிகளை சந்திக்காமல் அமைச்சர் சாமிநாதன் கால தாமதம் செய்கிறார். இதை கண்டித்து காங்கயம் தி.மு.க., அலுவலகம் முன், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், 30ம் தேதி நடக்கிறது. இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
28-ஜூலை-202209:07:23 IST Report Abuse
duruvasar ஒரு பலி கடா ஆட்டை எவ்வளவு தடவை வெட்டுவீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X