கோவை : தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் கோட்ட பொறியாளர்களில், 42 அதிகாரிகள், நிர்வாக காரணங்களுக்காக, வெவ்வேறு நகரங்களுக்கும், பணியிடங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறையில் கோட்ட பொறியாளராக பணியாற்றிய சமுத்திரக்கனி, மாநில நெடுஞ்சாலைத்துறையில் கோவையில் செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களுக்கு கோட்ட பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, தஞ்சாவூரில் துணை கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றிய ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் கோட்ட பொறியாளராக இருந்த மாதேஸ்வரன், ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக, வேலுாரில் கிராம சாலைகள் மற்றும் நபார்டு பிரிவில் பணிபுரிந்த சுந்தரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூரில் கட்டுமானம், பராமரிப்பு, தரக்கட்டுப்பாடு பிரிவில் பணியாற்றிய செல்வக்குமார், கோபிச்செட்டிபாளையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, தாராபுரத்தில் பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.