ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

Updated : ஜூலை 28, 2022 | Added : ஜூலை 28, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தனர்.ஒவ்வொரு மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசையான்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம்,
ஆடி அமாவாசை, தர்ப்பணம், முன்னோர்கள், மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தனர்.

ஒவ்வொரு மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசையான்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.


latest tamil news


ஆடி அமாவாசை தினமான இன்று (ஜூலை 28) ஆறுகள் மற்றும் கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், தாமிரபரணி ஆறு, மதுரை வைகை ஆறு, ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரை, காவிரி ஆறு பாயும் சேலம், திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (41)

28-ஜூலை-202219:20:35 IST Report Abuse
அப்புசாமி சோத்துருண்டைய மீன் சாப்புடும். சரி. இவிங்க கொண்டார ப்ளாஸ்டிக் , பேப்பர் குப்பையெல்லாம் எவன் எடுப்பான்? எல்லாம் சாக்கடையில் போய் அடைச்சுக்கும்.அப்புறம்.மழை பெஞ்சு தண்ணோட்டாம போச்சுன்னா குய்யோ முறையோன்னு அடிச்சிப்பாங்க. எந்த அரசு ஆண்டாலும் குற்றம் சொல்லுவாங்க. அரசு ஆளுங்களோ சுத்தம் செய்யறேன்னு சொல்லி காண்டிராக்ட்ல ஆட்டையப் போடுவாங்க.
Rate this:
Cancel
SIVA - chennai,இந்தியா
28-ஜூலை-202219:11:35 IST Report Abuse
SIVA இது எப்போதும் திராவிட பூமி அல்ல , பல ஆயிரம் ஆண்டுகளாக இது ஆன்மிக பூமி , ரஜினி ஆன்மிக அரசியல் செய்வேன் என்று சொன்ன போது அவரை மதவாதி என்று முத்திரை குத்தினார்கள் , இவ்ரகள் இப்போது எப்படியாவது ஆன்மிக அரசு என்று பெயர் வாங்க படாதா பாடு படுகிறார்கள் , இது அப்ப அப்ப திராவிட மாடல் வேற ,
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-202217:10:29 IST Report Abuse
Venugopal S பாஜகவிற்கு ஓட்டுப் போட்டு, அதுவும் ஒரு தடவை இல்லை இரண்டு தடவைகள் மத்தியில் தேர்ந்தெடுத்ததற்கு நாட்டுக்கே தர்ப்பணம் கொடுக்க வேண்டியதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X