சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சுரங்கம் தோண்டும் பிளாஸ்மா கதிர்!

Added : ஜூலை 28, 2022 | |
Advertisement
பாதாள சாக்கடை முதல் நிலத்தடி பாதை வரை பல தேவைகளுக்கு சுரங்கம் தோண்டுவது அவசியம். இத்துறையை நவீனப்படுத்த வருகிறது 'எர்த் கிரீட்' என்ற அமெரிக்காவின் புத்திளம் நிறுவனம். இது 100 மடங்கு வேகமாக, 98 சதவீதம் கம்மி செலவில் சுரங்கம் தோண்டும் கருவியை உருவாக்கியிருக்கிறது.சக்கரம் வைத்த ரோபோ ஒன்றின் முன்பக்கம், பிளாஸ்மா கதிர் பாய்ச்சும் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும்.
சுரங்கம் , பிளாஸ்மா கதிர், எர்த் கிரீட் ரோபோ, Plasma Ray, plasma boring robot,

பாதாள சாக்கடை முதல் நிலத்தடி பாதை வரை பல தேவைகளுக்கு சுரங்கம் தோண்டுவது அவசியம்.

இத்துறையை நவீனப்படுத்த வருகிறது 'எர்த் கிரீட்' என்ற அமெரிக்காவின் புத்திளம் நிறுவனம். இது 100 மடங்கு வேகமாக, 98 சதவீதம் கம்மி செலவில் சுரங்கம் தோண்டும் கருவியை உருவாக்கியிருக்கிறது.

சக்கரம் வைத்த ரோபோ ஒன்றின் முன்பக்கம், பிளாஸ்மா கதிர் பாய்ச்சும் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும். மின்சாரத்தில் இயங்கும் பிளாஸ்மா கதிர்கள் 48.6 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை உமிழும். இக்கருவி, தொடாமலேயே பாறைகளை நொறுக்கும்.

எர்த் கிரீட் சுரங்க ரோபோவால் ஒரு நாளைக்கு, ௧ கி.மீ., நீள சுரங்கம் தோண்ட முடியும். மீட்டருக்கு 24 ஆயிரம் ரூபாய் செலவாகும்.அரசு மின்சார, இணைய மற்றும் குடிநீர் சேவைகளை இந்நுட்பம் மலிவாக்கும் என்கின்றனர் எர்த் கிரீட்டின் நிறுவனர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X