சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆறுதல்!

Added : ஜூலை 28, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் சிக்கல் இருப்பவர்கள் தான் சர்க்கரை நோயாளிகள். பாதிக்கப்பட்ட கணையத்தில் மீண்டும் இன்சுலினை சுரக்க வைத்தால் எப்படி இருக்கும்? கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அந்த ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.எப்படி? ஏற்கனவே வேறு ஒரு நோய்க்காக அனுமதிக்கப்பட்ட மருந்து ஒன்றின் வாயிலாக,
சர்க்கரை நோயாளிகள், நீரிழிவு நோய் , ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் , இன்சுலின் , Diabetics, Australia scientists,

கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் சிக்கல் இருப்பவர்கள் தான் சர்க்கரை நோயாளிகள். பாதிக்கப்பட்ட கணையத்தில் மீண்டும் இன்சுலினை சுரக்க வைத்தால் எப்படி இருக்கும்? கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அந்த ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

எப்படி? ஏற்கனவே வேறு ஒரு நோய்க்காக அனுமதிக்கப்பட்ட மருந்து ஒன்றின் வாயிலாக, மீண்டும் கணைய செல்களில், இன்சுலின் சுரப்பதைத் துாண்ட முடியும் என, அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த செய்தி நீரிழிவு நோய் உலகில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவ முகமை அனுமதி அளித்துள்ள மருந்து 'ஜி.எஸ்.கே.126!' இந்த மருந்தை, நீரிழிவு நோய் உள்ள சிலரின் செல்களை எடுத்து, ஆய்வக கிண்ணிகளில் வைத்து கொடுத்தனர். அப்போது, அந்த செல்கள், இன்சுலினை சுரக்கச் செய்தன.

இந்த சோதனை அசல் நோயாளிகளுக்கும் இதே போல பலனளித்தால், சில நாட்களில் அவர்கள் சர்க்கரை நோயை மறந்துவிடலாம் என சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோயை இல்லாமல் ஆக்கும் இந்த சிகிச்சை நிச்சயம் வேகமாக பிரபலம் ஆகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
navin - trichy,இந்தியா
02-ஆக-202210:05:42 IST Report Abuse
navin டயாபடீஸ் நோயாளிகளுக்கான மருந்து வணிகம், supplements உலக அளவிலும் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான கோடிகளில் நடந்து கொண்டிருக்கிறது. மருந்து mafia அசுரர்கள் சர்க்கரை நோயை முற்றாக ஒழிக்க கூடிய மருந்தை கண்டு பிடிக்கவும் மாட்டார்கள்.. ஒருவேளை யாராவது கண்டுபிடித்தாலும் விற்பனைக்கு வருவதை தடுத்து விடுவார்கள்
Rate this:
15-ஆக-202218:18:37 IST Report Abuse
Rohitram Rfc6204914...
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
29-ஜூலை-202212:49:56 IST Report Abuse
Nakkeeran இப்போது நாட்டில் அதிகம் விற்பனை ஆவது இன்சுலின் மற்றும் சர்க்கரை நோயாய்க்கான மாத்திரைகள்தான் .தயாரிப்பாளர்கள் எதுவும் ஆட்க்ஷேபணை தெரிவிக்காமல் இருக்க வேண்டும்
Rate this:
KALIHT LURA - kovilnagaram,இந்தியா
29-ஜூலை-202217:51:02 IST Report Abuse
KALIHT LURAடாக்டர்களும் முட்டு கட்டை போடாமல் இருக்கவேண்டுமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X