கள்ளக்குறிச்சி வழக்கு : பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமின் கேட்டு மனு

Updated : ஜூலை 28, 2022 | Added : ஜூலை 28, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த கடலூர் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் ஜூலை13ம் தேதி பள்ளியில் இறந்து கிடந்தார்.
 கள்ளக்குறிச்சி மாணவி மரணம், கனியாமூர் சக்தி பள்ளி, பள்ளி தாளாளர், கள்ளக்குறிச்சி வழக்கு, Kallakurichi student death, Kaniyamur Shakti School, Kallakurichi case,

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த கடலூர் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் ஜூலை13ம் தேதி பள்ளியில் இறந்து கிடந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வரும் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா ஆகியோரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஜூலை 26ம் தேதி மனுதாக்கல் செய்தனர்.இவ்வழக்கு ஜூலை 27ம் தேதி நீதிபதி புஷ்பராணி கைது செய்யப்பட்டவர்களை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று (ஜூலை 28) விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூலை-202210:42:17 IST Report Abuse
Nepolian S அந்த மர்மம் முக்கியம்.... கற்பழிப்பு என்பதை கோர்ட் முடிவு செய்யும்....அதுவரை மர்மம்.... ஓகே..
Rate this:
Cancel
Nancy - London,யுனைடெட் கிங்டம்
28-ஜூலை-202216:11:59 IST Report Abuse
Nancy அந்த மாணவி எளிதிய கடிதம் ,, பிரேத பரிசோதனை முடிவு ஏன் வெளி வரவில்லை , நம்ம டிஜிபி பள்ளி மீது எந்த குற்றமும் இல்லை என்று சொன்னார் அப்புறம் மாறி விட்டார் , அந்த மாணவியின் பெற்றோர் பணத்துக்கும் அரசு வேலைக்கும் ஆதி போடுகிறார்கள் இது கோர்ட் கு தெரியும் .
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-ஜூலை-202215:32:51 IST Report Abuse
D.Ambujavalli While that girl's parents raise their voice about some traces which is suspec that it is a suicide, bail granting may encourage the school management to coax or threaten them to withdraw the case Chidambaram Udayakumar case cannot be forgotten
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X