சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று சற்று குறைந்து இன்று (ஜூலை 28 ம் தேதி) ஒரே நாளில் 1,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூலை 28) 36,028 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் 1,712 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,39,607 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,87,685 ஆக உயர்ந்துள்ளது. இன்று கோவிட்டுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. கோவிட்டுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,032 ஆக உள்ளது.

சென்னையில் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக காணப்பட்டது. நேற்று (ஜூலை 27 ம் தேதி ) 396 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 28 ம் தேதி) சென்னையில் 368 ஆக குறைந்து உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,890 ஆக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.