சென்னை: தமிழக பா.ஜ., தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் நடைபெற்ற செஸ்ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் சென்னைக்கு வருகை தந்தார். தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார். அவரை தமிழக பா.ஜ., நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்
ஆலோசனை கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வரும் 2024 ம் ஆண்டில் நடைபெற உள்ள பார்லி.,பொது தேர்தலின் போது தமிழக பா.ஜ.,விற்கான முக்கியத்துவம், தமிழக அரசியலில் பா.ஜ., மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.