வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பார்மர்: ராஜஸ்தானில் போர் விமானம் தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த இரு பைலட்டுகள் பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர்விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இன்று இரவு 9 மணி அளவில் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்தது எரிய துவங்கியது.
![]()
|
தீ வேகமாக பரவியதால் விமானம் முழுதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பைலட்டுகள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ பிடித்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.