தமிழில் பூஜை நடப்பதில்லையே! மதுரை ஆதீனம் ஆதங்கம்...

Updated : ஜூலை 29, 2022 | Added : ஜூலை 29, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
திருப்புத்துார்--''தமிழ், தமிழ் என்பவர்கள் வீடுகளில் கூட, தமிழில் பூஜைகள் நடப்பதில்லை,'' என, மதுரை ஆதீனம் பேசினார். சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் நடந்த, தமிழ் வேத ஆகம பயிற்சி நிறைவு விழாவில், மதுரை ஆதீனம் பேசியதாவது:கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என ஒரு கூட்டம் கூறுகிறது; இன்னொரு கூட்டம், செய்யக் கூடாது என்கிறது.பெண்கள் கூந்தலில் இயற்கையிலேயே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்புத்துார்--''தமிழ், தமிழ் என்பவர்கள் வீடுகளில் கூட, தமிழில் பூஜைகள் நடப்பதில்லை,'' என, மதுரை ஆதீனம் பேசினார்.



latest tamil news


சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் நடந்த, தமிழ் வேத ஆகம பயிற்சி நிறைவு விழாவில், மதுரை ஆதீனம் பேசியதாவது:கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என ஒரு கூட்டம் கூறுகிறது; இன்னொரு கூட்டம், செய்யக் கூடாது என்கிறது.பெண்கள் கூந்தலில் இயற்கையிலேயே மணம் உண்டா என பாண்டிய மன்னனுக்கு எழுந்த சந்தேகத்தை தீர்க்க, தமிழ் புலவராக சிவபெருமானே காட்சி அளித்தார்.


latest tamil news



வடமொழி, தமிழ் எதிலும் பூஜைகள் செய்யலாம். அந்தந்த மொழிகளில் பூஜை செய்பவர்கள் செய்யட்டும். ஆனால், தமிழில் பூஜை செய்வதை தடுக்க கூடாது.தமிழ், தமிழ் என்பவர்கள் வீடுகளில் கூட, தமிழில் பூஜைகள் நடப்பதில்லை. பெண்மையை போற்ற வேண்டும். மொழி உணர்வுடன் வாழ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (50)

29-ஜூலை-202215:48:52 IST Report Abuse
ஆரூர் ரங் நான் பல அர்ச்சகர்களிடம் விசாரித்தவரை 🙃அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்ய யாரும் கேட்பதில்லை. அரசியல்வாதிகள் குடும்பத்தவர்கள் கூட கேட்பதில்லை. ஸ்டாலின் மனைவி கூட வீட்டில்🙏 சமஸ்கிருத சுலோகங்களையும் சொல்லி வழிபடுகிறார். இதில் திணிப்பு அநாவசிய அரசியலே. கோவில் நடைமுறைகளில் எவ்விதத்திலும் தலையிட மாநில அரசுக்கு அரசியல் சட்டம் எவ்வித உரிமையையும் அளிக்கவில்லை. நடப்பது அத்துமீறல்.
Rate this:
Dees - Chennai,இந்தியா
29-ஜூலை-202217:08:39 IST Report Abuse
Deesஅர்ச்சகர் அப்படித்தானே சொல்லுவார் அது அவரோட வயிற்று மற்றும் வாழ்க்கை பிரச்னை...
Rate this:
Suri - Chennai,இந்தியா
29-ஜூலை-202220:38:44 IST Report Abuse
Suriஅந்த அந்த நாட்டு மொழிகளில்கடவுள் வழிபாடு நடந்த்தாலே மட்டும் தான் கிறிஸ்துவம் இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறது. லத்தீன மொழி வழிபாட எதிர்த்து எந்த நூற்றாண்டில் மக்கள் கொடி பிடித்தார்கள் என்பது சரித்திரம் தெரிந்தவர்கள் கூறுவார்கள்....
Rate this:
Suri - Chennai,இந்தியா
29-ஜூலை-202220:41:15 IST Report Abuse
Suriஅத்துமீறல் என்று கூறுவது எதேச்சதிகார போக்கு. ஒரு மொழியை திணிக்கும் போக்கு..எது அனாவசிய திணிப்பு??...
Rate this:
Cancel
29-ஜூலை-202215:44:11 IST Report Abuse
ஆரூர் ரங் வேதபாஷையிலிருந்து உருவான பூஜை மந்திரங்களது (அவை சமஸ்கிருதமல்ல) பொருளை மனிதர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது. அவற்றின் ஒலிதான் முக்கியம் .அவை காதால் கேட்டு மட்டுமே நேரடியாகக் கற்பிக்கப்படுகின்றன. அவற்றுக்குள்ள🙏🙏 சக்தி அளப்பரியது. அவை மட்டும் கர்ப்பகிரகத்தில் ஓதத்தகுந்தவை . தமிழ் வேதங்களான தேவாரம் திவ்யப் பிரபந்தம் எல்லாவிடங்களிலும் ஓதத் தகுந்தவை. எல்லா முக்கிய சிவாலயங்களிலும் ஓதுவா மூர்த்திகள் தேவாரம் திருவாசகம் ஓதுகின்றனர். ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு தனித்தனி இடமுண்டு. குறிபிட்ட மொழிக்கு உயர்வு என்பதில் உண்மையில்லை. எல்லா பக்தர்களும் அவரவர் கோரிக்கைகளை தத்தமது தாய்மொழியில்தான் வேண்டிக்கொள்கிறார்கள். ஆதீனம் இதுபோன்ற விவாதங்களைத் தவிர்க்கலாம்
Rate this:
Suri - Chennai,இந்தியா
29-ஜூலை-202216:40:57 IST Report Abuse
Suriகம்பி கட்டும் கதயெல்லாம் அவிழ்த்துவிடும் கும்பல் பெருகிவிட்டன......
Rate this:
Dees - Chennai,இந்தியா
29-ஜூலை-202217:12:47 IST Report Abuse
Deesகம்பி மட்டுமே கட்டுவாங்க கேழ்வரகுல நை வரும்னு கூட சொல்லுவாங்க, காலம் காலமா மக்களை ஏமாற்றியே பிழிகிறங்கலாச்சே...
Rate this:
Suri - Chennai,இந்தியா
29-ஜூலை-202220:35:48 IST Report Abuse
Suri.ஒரு ஆஸ்திரேலியா தமிழ் ப்ரொபஸர் அதே போன்ற ராகத்துடன் தமிழில் அதே மாதிரி வழிபாடு மந்திரங்களை பாடி அதே அலைவரிசையை உருவாக்கி பாடிக்காண்பித்துள்ள காணொளியை கொஞ்சம் பாருங்க......
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-202215:27:03 IST Report Abuse
Rasheel இறைவனை வழிபடுவதில் மொழி வித்தியாசம் தேவை இல்லை. தமிழ் வேதம் முன் செல்ல வட மொழி வேதம் பின் செல்லும் முறையை வகுத்தது வைணவம். இறைவனே என்னை தமிழில் பாடு என்று கூறி நால்வர் வழி மூலம் பிறந்ததுதான் தேவாரம் போன்ற நூல்கள் உள்ள சைவ மதம். தமிழில் பாடிய காரைக்கால் அம்மையாரை எனது அம்மையே என்று இறைவன் அழைத்து கைலாயத்தில். எனவே பக்தி தான் முக்கியம். மொழியல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X