பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு டான்டீ தேயிலை தொழிற்சாலை இன்று மின்வெட்டு காரணமாக செயல்படவில்லை. இதனால் காலையில் வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க இயலாது என கோட்ட மேலாளர் புஷ்பராணி தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சாலையில் ஜெனரேட்டர் உள்ள நிலையில், தொடர்ச்சியாக நிர்வாகம் இதுபோல் மின்வெட்டு சமயங்களில் பணி மறுக்கப்படுவதாகம், தொழிற்சாலையின் நிர்வாகத்தை கண்டிப்பதாகவும் கூறி தொழிற்சாலை முன்பாக தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.