கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுனாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் பிரபாகரன் (58) பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் நடத்தினர். பாலியல் புகார் எழுந்ததை அடுத்து, ஆசிரியர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. பின்னர், பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement