குரங்கம்மை சந்தேகத்தின் பேரில் 4 பேர் அனுமதி

Added : ஜூலை 30, 2022 | |
Advertisement
நாகர்கோவில்:குரங்கம்மை சந்தேகத்தின்பேரில் நான்கு பேர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு சாதாரண அம்மை நோய்தான் என்று சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர். தக்கலை அருகே வில்லுக்குறியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள் என நான்கு பேர் தொடர் காய்ச்சலால் அவதியுற்றனர். பின்

நாகர்கோவில்:குரங்கம்மை சந்தேகத்தின்பேரில் நான்கு பேர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு சாதாரண அம்மை நோய்தான் என்று சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

தக்கலை அருகே வில்லுக்குறியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள் என நான்கு பேர் தொடர் காய்ச்சலால் அவதியுற்றனர். பின் அவர்களது உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. இது குரங்கம்மை நோய்க்கான அறிகுறி என்ற சந்தேகத்தில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் குரங்கம்மை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இது சாதாரண அம்மை நோய் போல தெரிந்தாலும், இவர்களது ரத்த மாதிரி புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X