தமிழக போலீசுக்கு ஜனாதிபதியின் சிறப்புக்கொடி| Dinamalar

தமிழக போலீசுக்கு ஜனாதிபதியின் சிறப்புக்கொடி

Updated : ஆக 01, 2022 | Added : ஜூலை 31, 2022 | கருத்துகள் (11) | |
சென்னை: தமிழக போலீஸ் துறைக்கு மிக உயிரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டது. கொடியை துணை ஜனாதிபதி வழங்க முதல்வர் ஸ்டாலின் பெற்று கொண்டார்.தமிழக போலீஸ் துறைக்கு மிக உயிரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு , சென்னை
தமிழக போலீஸ், துணை ஜனாதிபதி, ஜனாதிபதி சிறப்பு கொடி, வெங்கையாநாயுடு, ஸ்டாலின்

சென்னை: தமிழக போலீஸ் துறைக்கு மிக உயிரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டது. கொடியை துணை ஜனாதிபதி வழங்க முதல்வர் ஸ்டாலின் பெற்று கொண்டார்.



தமிழக போலீஸ் துறைக்கு மிக உயிரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்வர் ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு , சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெங்கையா நாயுடுவை, டிஜிபி, கமிஷனர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.




latest tamil news


தொடர்ந்து போலீஸ் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ஜனாதிபதியின் சிறப்பு கொடியை வெங்கையா நாயுடு வழங்க, ஸ்டாலின் பெற்று கொண்டார்.இந்த கொடியை, இதுவரை இந்தியாவில் 10 மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடுவுக்கு சதுரங்க அட்டையை ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.


latest tamil news




தமிழகம் முன்னோடி

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: ஜனாதிபதியின் கவுரவ கொடியை பெற்றத ஒட்டு மொத்த தமிழக போலீஸ் துறைக்கே பெருமை. போலீஸ் துறையின்10 ஆண்டு கடின உழைப்பிற்கான பெருமை. ஜனாதிபதி கொடியை பெற்றதால் தமிழக காவல்துறை உயர்ந்த அங்கீகாரத்தை பெறுகிறது. போலீசில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்ததில் தமிழகம் முன்னோடி.



latest tamil news


தமிழக போலீஸ் நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது. முன்னோடி மட்டுமல்ல முன்னணியிலும் உள்ளது. ஜனாதிபதியின் விருது பெற்றது தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பெருமை. உயிரை பொருட்படுத்தாமல் தமிழக காவல் துறை சேவைக்கான அங்கீகாரம். ஜாதி மத கலவரங்கள் துப்பாக்கிச்சூடுகள் இல்லை. போலீஸ் ஸ்டேசனில் மரணங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது. டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு முதல் காவலர் பதக்கங்கள் வழங்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.



கூடுதல் கவனம்


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதில் போலீஸ் துறை முன்னோடியாக உள்ளது. விலை மதிப்பற்ற 10 சிலைகளை வெளிநாட்டில் இருந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகளவில் நடக்கும் சைபர் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X