காமன்வெல்த்: பளுதூக்குதலில் தங்கம் வென்றார் அசின்டா சியுலி!

Updated : ஆக 01, 2022 | Added : ஆக 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் அசின்டா சியுலி, 73 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இது 3வது தங்கப் பதக்கம்.இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பளுதுாக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அசின்டா சியுலி பங்கேற்றார்.'ஸ்னாட்ச்'
Commonwealth Games 2022, Achinta Sheuli, Gold, Achinta, weightlifting, Birmingham 2022

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் அசின்டா சியுலி, 73 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இது 3வது தங்கப் பதக்கம்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பளுதுாக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அசின்டா சியுலி பங்கேற்றார்.



latest tamil news




'ஸ்னாட்ச்' பிரிவில் அதிகபட்சமாக 143 கிலோ துாக்கிய அசின்டா, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் அதிகபட்சமாக 170 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 313 கிலோ பளுதுாக்கிய இவர், காமன்வெல்த் விளையாட்டில் புதிய சாதனையுடன் தங்கம் வென்றார்.



latest tamil news



latest tamil news



இது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 3வது தங்கம் ஆகும். முதல் தங்கத்தை மீராபாய் ஜானு பெற்றுத் தந்த நிலையில், 63 கிலோ எடைப் பிரிவு பளுதுாக்குதலில், இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 3வது நாள் முடிவில், இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
01-ஆக-202211:03:15 IST Report Abuse
J. G. Muthuraj தம்பிகளா...பின்றீங்கப்பா....டென்ஷன் இல்லாம அலாக்கா வெயிட்ட தூக்கி மெடல் வாங்குறீங்களே....வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-ஆக-202205:04:35 IST Report Abuse
Kasimani Baskaran அசின்டா சியுலிக்கு பாராட்டுகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X