வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை நீலாங்கரை கடலில் 60 அடி ஆழத்தில் நீச்சல் வீரர்கள் செஸ் விளையாடி சாதித்துள்ளனர்.
இந்தியாவில் முதல்முதலாக சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் தனியார் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக நீலாங்கரை அருகே ஆழ் கடலில் செஸ் விளையாடி நீச்சல் வீரர்கள் அசத்தியுள்ளனர்.
இந்த செஸ் ஒலிம்பியாட் சின்னமான 'தம்பி' தோற்றத்துடன் கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்துடன் சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.