புதுடில்லி: கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி 1,48,995 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் வசூலான ரூ.1,16,393 கோடியை விட 28 சதவீதம் அதிகம் ஆகும்.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலான ரூ.1,48,995 கோடியில்,
சிஜிஎஸ்டி - ரூ.25,751 கோடி
எஸ்ஜிஎஸ்டி - ரூ.32,807 கோடி
ஐஜிஎஸ்டி - ரூ.79,518 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.41,420 கோடி உட்பட)
செஸ் - ரூ.10,920 கோடி( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.995 கோடி உட்பட) அடங்கும்.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டுவது இது 6வது முறையாகும். கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தொடர்ந்து 5வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மேலும் இந்த ஜூலை மாத வசூலானது, கடந்த ஆண்டு ஜூலை மாத வசூலை விட 28 சதவீதம் அதிகமாகும்.