2 கல்லுாரிகளில் கஞ்சாவுக்கு இல்லை தடை...களமிறங்கி தேடப்போகிறது போலீஸ் படை!

Added : ஆக 02, 2022 | |
Advertisement
சித்ராவும், மித்ராவும் கால் டாக்சியில் ஈச்சனாரி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். பண்பலையில் பாட்டு சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது...ஆணென்ன பெண்ணென்ன...நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம்தான்...!பாட்டைக் கேட்டதும் மித்ராதான் ஆரம்பித்தாள்...''வசூல்லயும் எல்லாம் ஓரினம்தான்....போலீஸ்ல யாரு அதிகமா வசூல் பண்றதுக்கு ஒரு போட்டியே நடக்குதுக்கா. நம்ம மாவட்ட 'லேண்ட்
2 கல்லுாரிகளில் கஞ்சாவுக்கு இல்லை தடை...களமிறங்கி தேடப்போகிறது போலீஸ் படை!

சித்ராவும், மித்ராவும் கால் டாக்சியில் ஈச்சனாரி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். பண்பலையில் பாட்டு சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது...ஆணென்ன பெண்ணென்ன...நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம்தான்...!

பாட்டைக் கேட்டதும் மித்ராதான் ஆரம்பித்தாள்...''வசூல்லயும் எல்லாம் ஓரினம்தான்....போலீஸ்ல யாரு அதிகமா வசூல் பண்றதுக்கு ஒரு போட்டியே நடக்குதுக்கா. நம்ம மாவட்ட 'லேண்ட் கிராபிங்' பிரிவுல, ஒரு லேடி ஆபீசர் இருக்காங்க. அவுங்க அளவுக்கு வேற யாரும் வசூல் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க. கோர்ட்டே சொன்னாலும் அவுங்களுக்கு காணிக்கை செலுத்தாம, எப்.ஐ.ஆர்., போடமாட்டாங்களாம்!''குறுக்கிட்டு சித்ரா கேட்டாள்...''அதெப்பிடி பெரிய ஆபீசர் இதெல்லாம் பார்க்க மாட்டாங்களா?''''அது தெரியலைக்கா...கம்பிளைன்ட் பார்ட்டி, அக்யூஸ்ட் ரெண்டு பக்கமும் வசூல் பண்றதுல அவுங்க கில்லாடியாம். நகையை அஞ்சு லட்ச ரூபாய்க்கு அடகு வச்சிருவாங்களாம். அப்புறம் அதை ஏதாவது ஒரு 'பார்ட்டி'யை வச்சு திருப்பிருவாங்களாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!''''மித்து! நம்ம சிட்டி போலீஸ் கமிஷனர் பல நல்ல வேலைகள் செய்யுறாப்புல தெரியுது...போன வாரம், காலேஜ் நிர்வாகிகளைக் கூப்பிட்டு ஒரு மீட்டிங் போட்ருக்காரு. காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்ட்ட கஞ்சா புழக்கம் அதிகமா இருக்கு...அதைத் தடுக்கணும்னா நிர்வாகத்தோட ஒத்துழைப்பு வேணும்னு சொல்லிருக்காரு. அதுலயும் பர்ட்டிக்குலரா ரெண்டு காலேஜ்கள்ல கஞ்சா அதிகமா புழங்குறதை, நாங்க கண்டு பிடிச்சிருக்கோம்னு சொல்லிருக்காரு!''''எந்தெந்த காலேஜ்ன்னு சொன்னாராம்...?''''கூட்டத்துல சொல்லலை...தனியா சொல்லிருக்கலாம்....'இதெல்லாம் நிர்வாகமே கன்ட்ரோல் பண்ணனும்; இல்லேன்னா நாங்க காலேஜ்க்குள்ள வந்து 'சர்ச்' பண்ற நிலைமை வரும். அப்பிடி நாங்க வந்து கஞ்சாவோட பசங்களைப் பிடிச்சா, மேனேஜ்மென்ட் மேலயும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்'னு பகிரங்கமா எச்சரிச்சிருக்காரு!''''அப்பிடியே இந்த வாலாங்குளத்துல நாலஞ்சு போலீசை விட்டு, இந்த ஜோடிகளைத் துரத்தி விட்டா நல்லாருக்கும். அதுலயும் லேசா இருட்டிட்டா, அங்க நடக்குற 'கண்றாவி'களைப் பார்க்கவே முடியலைக்கா!''''அதான் போலீஸ் ஜீப்புல ரோந்து போயி, மைக்ல சொல்லிட்டே இருக்காங்களே!''சித்ரா சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் குறுக்கிட்டாள் மித்ரா...''இல்லைக்கா...அவுங்க எவ்வளவு சொன்னாலும் கேக்குறதில்லை. காலையில 11, 12 மணிக்கு உள்ளே போனா, ராத்திரி 10 மணியானாலும் அங்கயிருந்து நகர்றதே இல்லை. அப்புறம் ராத்திரியில லத்தியை எடுத்துட்டுப் போயிதான் துரத்த வேண்டியிருக்குன்னு, போலீசே புலம்புறாங்க. போன வாரம் ஒரு ஜோடிக்குள்ள நடந்த சண்டையில, அந்தப் பொண்ணை பையன் குளத்துல தள்ளி விட்டுட்டான்!''''அச்சச்சோ...அப்புறம்!''''தீயணைப்புத்துறைக்கு தகவல் சொல்லி, அவுங்க வந்து பொண்ணைக் காப்பாத்தி, ஜி.எச்.,ல சேர்த்து, அட்வைஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிருக்காங்க...எல்லாத்தையும் போலீசே பாக்குறது கஷ்டம். கார்ப்பரேஷனே அங்க செக்யூரிட்டிகளை நியமிச்சாதான் சரியா இருக்கும்!''''கார்ப்பரேசனுக்கே செக்யூரிட்டி போடணும் போலயிருக்கே...போற போக்கைப் பார்த்தா, ஆளும்கட்சி கவுன்சிலர்களே அழுது தீர்த்து, குளத்துல விழுந்துருவாங்க போலிருக்கு...அதிகாரிகளோட அட்ராசிட்டி அவ்ளோ அதிகமாயிட்டு இருக்கு!''மித்ராவின் குரலில் இருந்த அழுத்தத்தைப் பார்த்து விட்டு சித்ரா கேட்டாள்...''என்ன மித்து சொல்ற...வழக்கமா ஆளும்கட்சி கவுன்சிலர்கள் ஆட்டம்தானே அதிகமா இருக்கும்!''''அது அந்தக் காலம்...இது இந்தக் காலம். கார்ப்பரேசன்ல இருக்குற பெரும்பாலான ஆபீசர்ஸ், அ.தி.மு.க.,காரங்களா இருக்குறதால, கவுன்சில் கூட்டத்துல தப்புத் தப்பா தீர்மானங்களைக் கொண்டு வர்றாங்களாம். ஜூன் மாச கூட்டத்துல தீர்மான தவறுகளை, சென்ட்ரல் ஜோன் சேர்மனே பகிரங்கமா சுட்டிக்காட்டுனாங்க. அப்போ இனி எந்தப் பிரச்னையும் வராதுன்னு, 'டி.சி' சொன்னாங்க!''''அப்புறமும் தப்பு பண்றாங்களா?''''ஆமாக்கா...போன சனிக்கிழமை நடந்த கவுன்சில் கூட்டத்துலயும், வார்டு நம்பர்களைத் தப்பாக் குறிச்சு, நிதி ஒதுக்கிருக்காங்க. அதைப் பத்தி கவுன்சிலர்கள் பேச ஆரம்பிச்சதும், கமிஷனர் பிரதாப் தலையிட்டு, அதிகாரிகள் சார்புல பகிரங்கமா மன்னிப்புக் கேட்ருக்காரு. ஒரு கூட்டத்துல தப்பு வரலாம்; திருப்பித் திருப்பி வந்தா என்ன அர்த்தம்?''''யெஸ் மித்து...எனக்குத் தெரிய முன்னாடியெல்லாம் கவுன்சில் மீட்டிங் தீர்மானங்கள்ல ஒரு 'ஸ்பெல்லிங் மிஸ்டேக்' கூட இருக்காது...இப்போ வரி விதிப்புக்குழு, கல்வி, பூங்காக்கள் குழுவுக்கே தீர்மானங்களை வைக்காம, நேரடியா கவுன்சில் மீட்டிங் தீர்மானத்துல கொண்டு வர்றாங்களாம். கவுன்சில் பொறுப்புல இருக்குற அதிகாரிதான், இதுக்கெல்லாம் காரணம்னு சொல்றாங்க!''''அவர்தான்...தி.மு.க.,வுக்கு வாதாடுற ஒரு எம்.பி.,க்கு ரொம்ப நெருக்கமானவராச்சே...அந்த 'வில் பவர்'லதான் கார்ப்பரேஷன் ரோட்டுலயே, வீடு கட்றதுக்கு சப்போர்ட் பண்றாராம்!''மித்ரா சொன்னதைக் கவனிக்காத சித்ரா, ''அதிகாரிகள் மட்டுமில்லை மித்து...சாதாரண குடிதண்ணி கனெக்சன் கொடுக்குறதுல கூட, இன்னமும் அ.தி.மு.க.,காரங்க கைதான் ஓங்கிருக்கு!'' என்றாள். அதை மித்ரா ஆமோதித்தாள். மீண்டும் சித்ரா, ''ஆனா சிறுவாணி ரோட்டுல ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு, கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கே தெரியாம, குடிதண்ணி, பாதாள சாக்கடை இணைப்பு ரெண்டும் கொடுக்குறாராம். வீட்டு வாசல்லயே உப்புத்தண்ணி பைப் போட்டுத்தர்றாராம்!''''சூப்பர்க்கா...தீயா வேலை செய்யணும் குமாருன்னு சொல்லுவாங்க...இவரு தண்ணியா வேலை செய்யுறாரோ?''''இதுல கொடுமை என்னன்னா, கலெக்சனுக்காகவே மூணு பி.ஏ., வச்சிருக்காராம். ஒருத்தர் பாதாள சாக்கடை இணைப்புக்கு, இன்னொருத்தரு, உப்புத்தண்ணி, குடிதண்ணி கனெக்சனுக்கு...மூணாவது ஆளு, பில்டிங் அப்ரூவல், கான்ட்ராக்ட் வேலையெல்லாம் கவனிக்கிறதுக்காம்!''''நீங்க சொன்னதுமாதிரி, சம்பாதிக்கிற கவுன்சிலர்க சம்பாதிச்சிட்டுதான் இருக்காங்க. செங்குளம் பக்கத்துல ஒரு டாஸ்மாக் பார், ஏழு மாசமா இல்லீகலா நடக்குதாம். மூணு மாசம் டெபாஸிட் கழிஞ்ச பிறகும், நாலு மாசமா பணம் கட்டாம அதை நடத்துறது, அந்த ஏரியா கவுன்சிலர்தானாம்!''''இந்த விஷயம் நானும் கேள்விப்பட்டேன் மித்து....அதே குனியமுத்துார் மணல் மார்க்கெட் ஏரியாவுல இருக்குற பாரையும், ஆளும்கட்சிகாரர்தான் இல்லீகலா நடத்துறார்னு தகவல். ரெண்டு பார்களையும் மூடச் சொல்லி, அ.தி.மு.க.,காரங்க சீக்கிரமே போராட்டம் நடத்தப் போறாங்களாம்!''''அவுங்க நடத்துறாங்களோ இல்லியோ, 97வது வார்டு மக்கள், சீக்கிரமே தெருவுல இறங்கிப் போராடப் போறாங்க. ஏன்னா...ஏரியாவுக்குள்ள ஒரு வேலையும் நடக்கலை; கவுன்சிலரையும் பார்க்கவே முடியலைன்னு, கொந்தளிச்சுப் போயிருக்காங்க!''''ரெண்டு கவுன்சில் கூட்டத்துக்கு அவுங்க வரலையே...மூணாவது கூட்டத்துக்கும் வரலைன்னா பதவி போயிருக்குமே!''''அதைப்பத்தி தலைமை வரைக்கும் கம்பிளைன்ட் போனதால, சென்னையில இருந்து 'பிளைட்'ல வந்துட்டு, அரை மணி நேரம் கவுன்சில் கூட்டத்துல இருந்துட்டு, கையெழுத்தைப் போட்டுட்டுக் கெளம்பீட்டாங்க!''''அந்த கவுன்சில் மீட்டிங்குக்கு முன்னால, தி.மு.க.,கவுன்சிலர்கள் மீட்டிங் தனியா நடந்துச்சாமே...?''''ஆமாக்கா...வழக்கமா இந்த மாதிரி கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை, மேயர் ரூம் அல்லது ஏதாவது ஒரு குழுத் தலைவர் ரூம்லதான் நடத்துவாங்க. ஆனா சனிக்கிழமை கார்ப்பரேஷன் கான்பரன்ஸ் ஹால்லயே நடத்திருக்காங்க. இது ஆபீசர்களுக்குள்ளேயே ஒரு கான்ட்ரவர்சியா ஆயிருக்கு!''மித்ரா சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த சித்ரா, தி.மு.க., போஸ்டரைப் பார்த்து விட்டு, கட்சி மேட்டரைப் பற்றி விசாரித்தாள்...''தி.மு.க.,தேர்தல் முடிஞ்சிருச்சா மித்து...போன வாரத்துல, ஐநுாறு பேருக்கு மேல சென்னைக்குப் போயி, ஆ.ராசாகிட்ட ஏகப்பட்ட கம்பிளைன்ட்டை குவிச்சிருக்காங்க. அவரு அறிவாலயம் வரச்சொல்லீட்டாராம். போனவுங்க கையில எல்லாம் 'தினமலர்' இருந்திருக்கு....அதுல போட்ருக்கிறது நுாறு சதவீதம் உண்மைன்னு, சத்தமா கத்திருக்காங்க!''''பல இடங்கள்ல பஞ்சாயத்து முடியலைக்கா...சூலுார்ல ஒன்றியத்துல ஜெயிக்க ஒரு உடன்பிறப்பு லட்சம் லட்சமா செலவு பண்ணிருக்காரு. இன்னொருத்தரு, அமைச்சரைப் பிடிச்சிருக்காரு. ஆனா அங்க நகராட்சி, பேரூராட்சிக்கு எல்லாம் நிர்வாகிகளை அறிவிச்சிட்டு, ஒன்றியத்துக்கு அறிவிக்காம இருக்குறாங்க. ரெண்டு பேருமே கிறுக்குப் பிடிச்ச மாதிரி திரியுறாங்களாம்!''''அன்னுார்ல மண் கொள்ளை அமோகமா நடக்குதாம் மித்து...எங்க மண் எடுத்தாலும் ஒரு யூனிட்டுக்கு 300 ரூபா கேட்டு மிரட்டுதாம் ஒரு கும்பல். தரலைன்னா, உடனே ரெவின்யூ டிபார்ட்மென்ட்காரங்க வந்து, மண் எடுத்தவுங்களை மெரட்டுறாங்களாம். பைன் போடுறாங்களாம்...ஆபீசர்கள்ட்ட கேட்டா, 'எல்லாம் அந்த 'முருகனுக்குதான் வெளிச்சம்'னு சொல்றாங்களாம்!''சித்ரா சொல்லும்போதே, கோவில் வாசலில் கார் நின்றது. மீட்டர் பார்த்து பணத்தை செட்டில் செய்தாள் மித்ரா. இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு, கோவிலை நோக்கி நடந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X