அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருச்சி இடைத்தேர்தல் பா.ம.க. போட்டியில்லை: ராமதாஸ்

Added : செப் 07, 2011 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது என ராமதாஸ் அறிவித்துள்ளார். அ.தி.மு.க., வெற்றி பெற்றதும், அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றவர் மரியம்பிச்சை. பதவியேற்ற ஒரு வாரத்தில், திருச்சிக்குச் சென்றிருந்த அவர், சட்டசபையில் எம்.எல்.ஏ., பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கடந்த மே 23ம் தேதி காரில் சென்னை வந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட
 திருச்சி இடைத்தேர்தல் பா.ம.க. போட்டியில்லை: ராமதாஸ்

சென்னை: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது என ராமதாஸ் அறிவித்துள்ளார். அ.தி.மு.க., வெற்றி பெற்றதும், அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றவர் மரியம்பிச்சை. பதவியேற்ற ஒரு வாரத்தில், திருச்சிக்குச் சென்றிருந்த அவர், சட்டசபையில் எம்.எல்.ஏ., பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கடந்த மே 23ம் தேதி காரில் சென்னை வந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர், சுற்றுச்சூழல் அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவரது மறைவால், திருச்சி மேற்கு சட்டசபை தொகுதிக்கு ஏற்பட்ட காலி இடத்தை நிரப்ப, ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டியிருந்தது. இதன்படி, வரும் நவம்பர் 23ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. இதன்படி, இம்மாதம் 19ம் தேதி இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்றே மனு தாக்கல் துவங்குகிறது. மனு தாக்கலுக்கு செப்., 26 கடைசி நாள். ஓட்டுப் பதிவு அக்., 13லும், ஓட்டு எண்ணிக்கை அக்., 17 லும் நடக்கிறது. ஓட்டுப் பதிவு காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை, அக்.,17 காலை 8 மணிக்கு துவங்கும் என வெளியிட்டது.

இதனையடுத்து தி.மு.க. ,அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் பா.ம..க. இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்துள்ளது. இது குறித்து கடலூரில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. புதுவை இந்திராநகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதே வேளையில் விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட சிறுபான்மையினர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Madurai,இந்தியா
08-செப்-201100:25:37 IST Report Abuse
Kannan உங்கள நெனச்சு ஆளும் கட்சியே பயந்துகிட்டு இருந்துச்சு...நல்ல வேலை, அவங்க நெஞ்சுல பால வார்த்துடிங்க...!! உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் நாள் இருப்பதனால், போட்டி போடுவோம்னு சொல்லி இருகிங்க..கடைசில எஸ் ஆகிடனும்...ஓகே வா!!
Rate this:
Cancel
Gokulachandran - Tiruppur,இந்தியா
07-செப்-201123:25:35 IST Report Abuse
Gokulachandran இல்லை , இல்லை . நீங்கள் நிற்கத்தான் வேண்டும். தமிழக மக்கள் அதைத்தான் எதிர்பர்க்கிரர்கள்.
Rate this:
Cancel
nagaraj - tirupur,இந்தியா
07-செப்-201123:20:49 IST Report Abuse
nagaraj ஐய்யா அசத்திடீங்க போங்கா.. இந்த தடவையாவது சரியான முடிவ எடுத்து கட்சிகாரனையே திக்கு முக்காட வெச்சுடீங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X