கைதாகும் எம்.பி.,க்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை| Dinamalar

கைதாகும் எம்.பி.,க்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Updated : ஆக 02, 2022 | Added : ஆக 02, 2022 | கருத்துகள் (81) | |
சென்னை: திரிணமுல் காங்கிரஸ் அமைச்சரும், சிவசேனா எம்.பி.,யும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எச்சரிக்கையாக இருக்கும்படி, தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்த தகவல் வெளியாகிஉள்ளது.ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் மேற்குவங்க அமைச்சரும், திரிணமுல் காங்., மூத்த தலைவருமான, பார்த்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: திரிணமுல் காங்கிரஸ் அமைச்சரும், சிவசேனா எம்.பி.,யும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எச்சரிக்கையாக இருக்கும்படி, தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்த தகவல் வெளியாகிஉள்ளது.ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் மேற்குவங்க அமைச்சரும், திரிணமுல் காங்., மூத்த தலைவருமான, பார்த்தா சட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில், 20 கோடி ரூபாய் பணம் சிக்கியது.
latest tamil news
பதவி பறிப்பு


அதைத் தொடர்ந்து பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அதனால், அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை, நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் கைது செய்துஉள்ளது.நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்., தலைவர் சோனியா, ராகுல் ஆகியோரிடமும், அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைகள் தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை கலக்கமடையச் செய்துள்ளது. செந்தில் பாலாஜி உள்ளிட்ட தி.மு.க., அமைச்சர்கள் சிலர், அமலாக்கத்துறை விசாரணை வளைத்திற்குள் உள்ளனர்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஏற்கனவே, தி.மு.க., அமைச்சர்கள் பலர் மீது ஊழல் புகார் தெரிவித்துள்ளார். கவர்னரை நேரில் சந்தித்து மனுவும் அளித்துஉள்ளார். பொன்முடி, செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஏற்கனவே, ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், மூத்த அமைச்சர் பெரியசாமியிடம், ஜூலை 27-ல், எட்டு மணி நேரத்திற்கும் மேல் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.பதினான்கு ஆண்டுகளுக்கு முந்தைய புகாரில் நடத்தப்பட்ட இந்த விசாரணையால், தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய அரசின் அமைப்புகள், தி.மு.க.,வை குறிவைத்துள்ளன. எனவே, அரசு ஒப்பந்தங்கள், தனிப்பட்ட சந்திப்புகளின்போது, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்சி கூட்டங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் பா.ஜ.,வை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். பிரதமர் மோடியை விமர்சிக்கவே கூடாது.latest tamil news
மீள்வது கடினம்


வழக்குகளில் சிக்கி விட்டால், அவற்றில் இருந்து மீள்வது கடினம் என, தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துஉள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதனால் தான், செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடிக்கு, தி.மு.க., சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட மோடியிடம் நெருக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X