நடிகர் விஜயின் தந்தை வீடு 'ஜப்தி?'

Added : ஆக 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை--சட்டப்படி குற்றம் படத்துக்கான விளம்பர செலவு, 76 ஆயிரம் ரூபாயை வழங்காததை அடுத்து, இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டுடன் கூடிய அலுவலக பொருட்களை, 'ஜப்தி' செய்ய போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டு உள்ளது.முன்னணி நடிகர்கள்நடிகர் விஜயின்தந்தை, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், 2011ல், சட்டப்படி குற்றம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். அந்த
நடிகர் விஜயின் தந்தை வீடு 'ஜப்தி?'

சென்னை--சட்டப்படி குற்றம் படத்துக்கான விளம்பர செலவு, 76 ஆயிரம் ரூபாயை வழங்காததை அடுத்து, இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டுடன் கூடிய அலுவலக பொருட்களை, 'ஜப்தி' செய்ய போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டு உள்ளது.

முன்னணி நடிகர்கள்
நடிகர் விஜயின்தந்தை, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், 2011ல், சட்டப்படி குற்றம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். அந்த படத்தில் முன்னணி நடிகர்கள் சத்யராஜ், ஹரிஸ் கல்யாண் ஆகியோர் நடித்திருந்தனர்.இந்த படத்தை விளம்பரப்படுத்த, சென்னை வடபழநியில் உள்ள டி.என்.விஷூவல் என்ற விளம்பர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.ஒப்பந்த தொகையான 85 ஆயிரம் ரூபாயில், 45 ஆயிரம் ரூபாயை வழங்கவில்லை எனக்கூறி, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குனர் சந்திரசேகர் 12 சதவீத வட்டியுடன் சேர்த்து, 60 ஆயிரத்து 750 ரூபாயை வழங்க உத்தரவிட்டது.இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும், விளம்பர தொகையை வழங்காததால், உத்தரவை அமல்படுத்த கோரி, சரவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த 25வது உதவி உரிமையியல் நீதிமன்றம், வட்டி சேர்த்து 76 ஆயிரம் ரூபாய்க்கு, இயக்குனநர் சந்திரசேகருக்குச் சொந்தமாக, சாலிகிராமத்தில் உள்ள வீட்டுடன் கூடிய அலுவலகத்தில் உள்ள, மின் விசிறி, 'ஏசி, டேபிள்' உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய, கடந்த மாதம் உத்தரவிட்டது.

தகராறு
அதன்படி, நீதிமன்ற ஊழியர்கள், வீடு மற்றும் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நேற்று சென்றனர். அப்போது, சந்திரசேகரின் அலுவலக ஊழியர்கள், பொருட்களை ஜப்தி செய்ய விடாமல் தடுத்ததோடு, நீதிமன்ற ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை எனவும், போலீசார் உதவியுடன் உத்தரவை செயல்படுத்த அனுமதி கோரியும், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Hyderabad,இந்தியா
05-ஆக-202208:50:53 IST Report Abuse
raja 60,750 ரூபா குடுக்க முடியல்ல அதுவும் கோர்ட்டு சொல்லியும்.. பணக்காரனாயிட்டாலே ஈகோ தானா வந்துரும். அப்பறம் இப்பிடித்தான்.. சாலிகிராமத்துல செம்மயா ஒரு வீடு. ஹ்ம்ம். ஒன்னும் சொல்றதுக்கில்ல.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
02-ஆக-202210:46:05 IST Report Abuse
Narayanan தாய் ,தந்தையைக்காக்கும் கடன் மகனுக்கு இருப்பதால் இன்றைய கோடீஸ்வரன் விஜய் எங்கே போனார் ?? இந்த பணத்தை கொடுப்பித்து இந்த அசிங்கத்தை தவிர்க்கலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X