மழையை சமாளிக்க முடியாமல் அரசு திணறல்: பழனிசாமி குற்றச்சாட்டு

Updated : ஆக 02, 2022 | Added : ஆக 02, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை-'தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையையே சமாளிக்க முடியாமல், தி.மு.க., அரசு திணறி வருகிறது' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில் பல மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என, கடந்த 28ம் தேதி சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதேபோல, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி மற்றும் தென்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையையே சமாளிக்க முடியாமல், தி.மு.க., அரசு திணறி வருகிறது' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கண்டனம் தெரிவித்துள்ளார்.




latest tamil news


அவரது அறிக்கை:தமிழகத்தில் பல மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என, கடந்த 28ம் தேதி சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதேபோல, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்துஉள்ளது.



தி.மு.க., அரசு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த, நெல் மூட்டைகளை சரியானபடி பாதுகாப்பாக குடோன்களில் வைக்காததாலும், தார்ப்பாய் வைத்து மூடாததாலும், மூன்று நாள் மழையில், 5,000 நெல் மூட்டைகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன.நான் தவறுகளை சுட்டிக்காட்டும்போது, அமைச்சர்கள் சப்பைக்கட்டு கட்டி, பதில் கொடுக்கும் வேலையில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்திருக்க வேண்டும்.



தேவைப்படும் இடங்களில், நெல் மூட்டைகளை இருப்பு வைக்க, குடோன் வசதி ஏற்படுத்தி இருக்க வேண்டும். தேவையான தார்ப்பாய்களை வழங்கி இருக்க வேண்டும். இதை செய்திருந்தால், நெல் மூட்டைகள் சேதமடைந்து இருக்காது.கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், மழையால் பயிர்கள் பாதிப்படைந்து உள்ளன.



இதுவரை, யாரும் நேரில் பார்த்து, சேத மதிப்பை கணக்கெடுக்கவில்லை; பயிர் காப்பீட்டு திட்டம் வழியே, நிவாரணம் பெற முயற்சிக்கவில்லை.மதுரையில் 30ம் தேதி தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் கனமழை பெய்துள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியது. கோவில் யானையை மழை நீர் சூழ்ந்தது. மழைக்கு நான்கு பேர் பலியாகி உள்ளனர். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், இதுபோன்ற அவலங்கள் நிகழ்ந்துள்ளன.



latest tamil news


ஆட்சியில் இருப்போர், மக்களின் துன்பத்தை போக்குவர் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அ.தி.மு.க.,வினர் உடனடியாக உதவ வேண்டும்.முதல்வர் ஸ்டாலின், 'போட்டோ ஷூட்' நடத்தி, தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்வதில் காட்டும் அக்கறையை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி வைத்து, மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் காட்ட வேண்டும்.இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R MANIVANNAN - chennai,இந்தியா
02-ஆக-202216:43:14 IST Report Abuse
R MANIVANNAN நீங்கள் பத்து வருடம் ஆட்சியில் இருந்தீரிகளே . எத்தனை கோடௌன் காட்டினீர்கள் ?. நீங்கள் ஆட்சியில் இருந்த போது மழையே பெய்ய வில்லையே
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
02-ஆக-202215:16:05 IST Report Abuse
sankar 2015 டிசம்பர் மழை ஞாபகமிருக்கா, பழனி ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
02-ஆக-202213:13:12 IST Report Abuse
duruvasar வாக்குறுதி என படியல்போட்டு நோட்ஸ் அடித்து வீடு வீடாய் கொடுத்த எதையும் செய்ய முடியாத இவர்கள் சொல்லாததை செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X