இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': சிறுமியின் கருமுட்டை விற்பனை: 3 பேருக்கு ‛குண்டாஸ்'

Updated : ஆக 02, 2022 | Added : ஆக 02, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள் 9 வயது மருமகள் தலையை துண்டித்த 15 வயது அத்தைஜெய்ப்பூர்-ராஜஸ்தானில், 9 வயது பெண் குழந்தையின் தலையை துண்டித்த 15 வயது சிறுமி குறித்து விசாரணை நடக்கிறது.வட மாநிலங்களில் 'ஷ்ரவண்' எனப்படும் ஆவணி மாதத்தில் ஒன்பது நாட்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடும் 'தஷா மாதா' பூஜை நேற்று துவங்கியது. ராஜஸ்தானில், துங்கர்பூர் என்ற பழங்குடியின
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்9 வயது மருமகள் தலையை துண்டித்த 15 வயது அத்தைஜெய்ப்பூர்-ராஜஸ்தானில், 9 வயது பெண் குழந்தையின் தலையை துண்டித்த 15 வயது சிறுமி குறித்து விசாரணை நடக்கிறது.வட மாநிலங்களில் 'ஷ்ரவண்' எனப்படும் ஆவணி மாதத்தில் ஒன்பது நாட்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடும் 'தஷா மாதா' பூஜை நேற்று துவங்கியது.

ராஜஸ்தானில், துங்கர்பூர் என்ற பழங்குடியின கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலும் நேற்று காலை பூஜை செய்தனர்.அப்போது, அங்கிருந்த 15 வயது சிறுமி, பட்டாக்கத்தியை வைத்து குடும்பத்தினரை தாக்க முயற்சித்தார். அனைவரும் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். ஒரு அறைக்கு சென்ற அந்தச் சிறுமி, அங்கிருந்த தன் சகோதரனின் மகளான 9 வயது பெண் குழந்தையின் தலையை துண்டித்தார்.

அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் இருந்து பட்டாக் கத்தியை பறித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.விசாரணையில், கடந்த இரு நாட்களாக அந்த சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.


ஐ.எஸ்., அமைப்பின் பெயரில் குழு: இருவரிடம் என்.ஐ.ஏ., விசாரணைபோபால்-ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பெயரில், சமூக ஊடகங்களில் குழு ஆரம்பித்த இருவரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக, மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்தார்.

ம.பி.,யில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, போபால் மற்றும் ரெய்சன் மாவட்டங்களில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சிலர் செயல்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த இரண்டு மாவட்டங்களில் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.இது குறித்து ம.பி., உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது:பீஹாரில், புல்வாரி ஷெரீப் என்ற இடத்தில் பயங்கரவாத நடவடிக்கையில் சிலர் ஈடுபட்ட வழக்கு, ம.பி.,யில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடமாட்டம் தொடர்பான வழக்குகள் குறித்து, ஆறு மாநிலங்களில், 13 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், ம.பி.,யின் போபால் மற்றும் ரெய்சன் மாவட்டங்களும் அடங்கும்.இங்கு, முகமது அனஸ் மற்றும் முகமது ஜுபைர் என்ற இருவரை சந்தேகத்தின்படி என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்.இவர்கள் இருவரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பெயரில், 'டெலிகிராம்' தகவல் பரிமாற்ற செயலியில் குழுக்களை நிறுவியது தெரியவந்தது. அவர்களது, 'லேப் டாப், மொபைல் போன்' ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். விசாரணைக்கு பின் இருவரும் விடுவிக்கப்பட்டனர். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களையும் உஷார்படுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக நிகழ்வுகள்
வாழை மரத்தை சேதப்படுத்திய தாசில்தார், இன்ஸ்.,சுக்கு அபராதம்சென்னை--வாழை மரங்களை சேதப்படுத்தி, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தாசில்தார், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட எட்டு பேருக்கு, 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளைத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவர், 2018-ல் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:மேட்டுப்பாளையம் தாசில்தார், சிறுமுகை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட எட்டு பேர், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதாக கூறி, என் பட்டா நிலத்தில் நடப்பட்டிருந்த 200 வாழை மரங்களை சேதப்படுத்தினர்.பொய் வழக்கு பதிவு செய்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:துரைசாமியின் நிலத்தில் வாழை கன்றுகளை சேதப்படுத்தி, அவருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது, ஆணைய விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட துரைசாமிக்கு, நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்தத் தொகையை, மேட்டுப்பாளையம் தாசில்தார், காரமடை வட்டார வளர்ச்சி அதிகாரி, இலுப்பநத்தம் கிராம நிர்வாக அதிகாரி, சிறுமுகை இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்ளிட்ட எட்டு பேரிடம் இருந்து பெறலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

'


கூரியரில்' போதை மாத்திரை;மெடிக்கல் ஸ்டோருக்கு 'சீல்'


தஞ்சாவூர்;கும்பகோணத்தில் இருந்து 'கூரியர்' மூலம், கல்லுாரி மாணவர்களுக்கு போதை மாத்திரைஅனுப்பிய மெடிக்கல் ஷாப்பிற்கு, நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஹாஜியார் தெருவில், முகமது பஷீர், 48, என்பவர் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். கோயம்புத்துாரை சேர்ந்த கல்லுாரி மாணவர்களுக்கு, கும்பகோணத்தில் இருந்து கூரியர் மூலமாக போதை மாத்திரை, போதை பொருட்களை அனுப்பி வந்ததாக, இவரை, கடந்த 16ம் தேதி, கோயம்புத்துார் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவர் அனுப்பிய போதை மாத்திரையை பயன்படுத்திய கல்லுாரி மாணவர் ஒருவர் உயிரிழந்ததால், முகமது பஷீரை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இருப்பினும், தொடர்ந்து செயல்பட்டு வந்த மெடிக்கல் ஷாப்பிற்கு, தஞ்சாவூர் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் மலர்விழி, கும்பகோணம் டி.எஸ்.பி., அசோகன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி முன்னிலையில், நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.


latest tamil newsகார் தாறுமாறு: 7 பேர் காயம்திருப்பூர்:திருப்பூர் - தாராபுரம் ரோடு, கோவில்வழியில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் சிவப்பு கார் ஒன்று அதிவேகத்தில் சென்றது.இந்த கார் கே.செட்டிபாளையத்தில் உள்ள திருமண மண்டபம் அருகே வந்த போது, திடீரென தாறுமாறாகவும், அதிவேகமாக சென்றது. அதில், அடுத்தடுத்து, மூன்று டூவீலர்கள் மீது மோதியும், மையதடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில், டூவீலர்களில் வந்த, ஏழு பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். காரை ஓட்டி வந்த நபர் யார் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரித்தனர். மண்ணரை பகுதியை சேர்ந்த கார் என்பது முதல்கட்டமாக தெரிந்தது. ஓட்டிய நபர் குறித்து நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்புசிவகங்கை-சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த வன்கொடுமை தடுப்பு சட்ட தனி நீதிபதி ஜி.முத்துக்குமரன், தண்டனை விவரம் ஆக.,3 தெரிவிக்கப்படும் என்றார்.

கச்சநத்தம் கருப்பர் கோயிலில் முதல் மரியாதை வழங்குவதில் இரு தரப்பினருக்குள் பிரச்னை ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் 2018 மே 28 இரவு 9:00 மணிக்கு ஒரு தரப்பினர், கச்சநத்தத்தில் உள்ள மற்றொரு தரப்பினர் வீடுகளில் புகுத்து அரிவாளால் தாக்கினர். இதில் கச்சநத்தம் சண்முகநாதன் 31, ஆறுமுகம் 65, சந்திரசேகர் 34, பலியாயினர். சுகுமாறன் 23, மலைச்சாமி 50, தனசேகரன் 32, மகேஸ்வரன் 18, தெய்வேந்திரன் 45, ஆகியோர் காயமுற்றனர். தனசேகரன் 2020 ஜன., 16 உயிரிழந்தார்.

33 பேர் மீது வழக்கு

இக்கொலை வழக்கில் ஆவரங்காடு கந்தசாமி 37, கச்சநத்தம் முத்தையா 60, உட்பட 33 பேர் மீது பழையனுார் போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் 3 சிறுவர்கள், ஒருவர் இறந்தனர். மற்றொருவர் தலைமறைவாக உள்ளார். மீதமுள்ள 27 பேர் நேற்று மதுரை, திருச்சி சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் 3 டி.எஸ்.பி.,க்கள் 5 இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உட்பட 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

27 பேரும் குற்றவாளிகள்

நேற்று காலை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் மாலை 5:00 மணிக்கு வழக்கில் கைதானவர்களின் குற்ற விபரங்களை நீதிபதி வாசித்தார். தொடர்ந்து இரவு 7:35 மணி வரை வாசித்ததும் 27 பேர்களும் குற்றவாளிகள் என அறிவித்து, தண்டனை விவரத்தை ஆக., 3 ல் தெரிவிப்பதாக நீதிபதி ஜி.முத்துக்குமரன் கூறினார்.நீதிமன்ற வளாகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்றிரவு 8:00 மணிக்கு அரசு மகளிர் கல்லுாரி அருகே கூடிய ஆவரங்காடு, கச்சநத்தத்தை சேர்ந்தவர்கள் கைதானவர்களை பார்க்க அனுமதிக்க கோரி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.


தனுஷ்கோடியில் 94 கிலோ கஞ்சா பறிமுதல்ராமேஸ்வரம்--தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கிய 94 கிலோ கஞ்சாவை, மரைன் போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.தனுஷ்கோடியில் இருந்து பாம்பன் குந்துகால் செல்லும் தென் கடற்கரை கொடிமரபாடு எனுமிடத்தில் நேற்று காலை, 47 பார்சல்கள் கரை ஒதுங்கின.தனுஷ்கோடி மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்.ஐ., காளிதாஸ், போலீசார் கைப்பற்றி சோதனையிட்டதில் 94 கிலோ கஞ்சா இருந்தது.இதை மண்டபம், பாம்பனில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தல்காரர்கள் கடத்தி சென்றபோது, இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலை கண்டதும், கஞ்சா பார்சலை கடலில் துாக்கி வீசி விட்டு தப்பி உள்ளனர். இதன் இலங்கை மதிப்பு 20 லட்சம் ரூபாய்.


latest tamil newsரூ.69 லட்சம் மோசடி: 2 பேர் கைதுதிருநெல்வேலி--போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி செய்த மேலாளர் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டனர்.கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனம் நகைக்கடன் வழங்குகிறது. திருநெல்வேலி கிளையில் மேலாளராக திருநாவுக்கரசு 38, விற்பனை பிரதிநிதியாக அவரது மைத்துனர் செந்தில் ஆறுமுகம் 27, பணிபுரிந்தனர். இருவரும் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை அடகு வைத்து ரூ. 69 லட்சம் கையாடல் செய்தனர். தலைமை அலுவலக அதிகாரிகள் லாக்கரில் சோதனை செய்தபோது போலி என தெரிந்தன. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: 3 பேருக்கு குண்டாஸ்ஈரோடு-ஈரோடில், 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈடுபட்ட மூவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

.ஈரோடில், 16 வயது சிறுமியின் கருமுட்டையை, எட்டு முறை தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்து பணம் பெற்ற தாய், வளர்ப்பு தந்தை மற்றும் புரோக்கராக செயல்பட்ட மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது, ஈரோடு, சூரம்பட்டி போலீசார், 'போக்சோ' உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.நீதிமன்ற உத்தரவுப்படி, பெண்கள் இருவரும், கோவை மத்திய சிறையில் உள்ளனர்.

வளர்ப்பு தந்தை, கோபி மாவட்ட சிறையில் உள்ளார்.தாய், வளர்ப்பு தந்தை, ஈரோடு கைகாட்டி வலசையைச் சேர்ந்த புரோக்கர் மாலதி, 36, ஆகியோர் ஜாமினில் வந்தால், மீண்டும் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈடுபடக்கூடும்.இதனால், 16 வயது சிறுமியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை போலீசார் ஆராய்ந்துள்ளனர்.

மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க, ஈரோடு சூரம்பட்டி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.ஓரிரு நாட்களில், மூவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - thenkaasi,இந்தியா
02-ஆக-202209:59:54 IST Report Abuse
vadivelu இவிங்க செய்யாத தொழிலே இல்லை போல் இருக்கே.என்ன அவ்வளவு கோபம் மாணவர்கள் மீது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02-ஆக-202208:38:06 IST Report Abuse
Natarajan Ramanathan சிறுமி கருமுட்டை விவகாரத்தில் கைதான குற்றவாளிகளுக்கு சாகும்வரை பரோல் இல்லாத ஜெயில் தண்டனை விதிக்கனும்.
Rate this:
Cancel
02-ஆக-202207:38:23 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி கருமுட்டையை உற்பத்தி செய்து விற்றவர்களுக்கு தண்டனையாம் ..... ஆனால் வாங்கிய தனியார் கரு உற்பத்தி மையம் / மருத்துவமனைகளுக்கு ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X