இது உங்கள் இடம்: சசிகலா நிலைமை மம்தாவுக்கு வரும்

Updated : ஆக 02, 2022 | Added : ஆக 02, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
உலக, நாடு, தமிழக, வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: ரா.சேது ராமானுஜம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மூன்று தமிழர்கள் சந்தித்தால், சினிமாவை பற்றி பேசுவர்; மூன்று வங்காளிகள் சந்தித்தால், பத்திரிகை துவங்குவது குறித்து பேசுவர்' என்பர். அப்படிப்பட்ட படித்த புத்திசாலிகள் நிறைந்த, முதல்வர் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக, வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


ரா.சேது ராமானுஜம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மூன்று தமிழர்கள் சந்தித்தால், சினிமாவை பற்றி பேசுவர்; மூன்று வங்காளிகள் சந்தித்தால், பத்திரிகை துவங்குவது குறித்து பேசுவர்' என்பர். அப்படிப்பட்ட படித்த புத்திசாலிகள் நிறைந்த, முதல்வர் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் தான், ஆளுங்கட்சியினரின் ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது.latest tamil news


இதே மாநிலத்தில், 1,000 கோடி ரூபாய் சாரதா 'சிட்பண்ட்' ஊழல் விவகாரத்தில், ஏற்கனவே மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய மூத்த அமைச்சர்கள் பலருக்கு தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. தற்போது அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் நியமனத்தில், பெருமளவு ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவரும், திரிணமுல் காங்., கட்சியின் பொதுச்செயலரும், மம்தாவின் மருமகனுக்கு அடுத்து மூன்றாமிடத்தில் இருக்கும், தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டு உள்ளார்.
சட்டர்ஜியின், 'அபிமான' நடிகையும், கூட்டாளியுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டிலிருந்து, பல கோடி ரூபாய்க்கும் மேலான பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பண மோசடியில் தொடர்புடைய, வேறு பலரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஊழலில் திராவிட கட்சிகளை எல்லாம் மிஞ்சி விட்டது, மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ். தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல் கட்சிகள் தான் என்பது நன்றாகத் தெரிந்தும், மாறி மாறி அந்த கட்சிகளுக்கே ஓட்டளிக்கின்றனர் தமிழக வாக்காளர்கள்.

அதுபோல, ஊழல்வாதிகளின் மகாராணியான மம்தாவின் கட்சிக்கே, மேற்கு வங்க மக்களும் ஓட்டளிக்கின்றனர். ஊழலில் திளைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் என்ற, ரிஷிமூலத்தில் கிளைத்த கட்சி தானே திரிணமுல் காங்கிரஸ். நல்லவேளை ஜெயலலிதாவின் தோழி சசிகலா போல, மம்தாவிற்கு தோழி யாரும் இல்லை. அதற்கு பதிலாக அவரின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் நிழலாட்சியில் தான், இந்த ஊழல்கள் எல்லாம் அரங்கேறுகின்றன.


latest tamil newsசி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையின் அதிரடிகள் தொடர்ந்தால், தமிழகத்தில் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டு, அவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்து, இருவரும் சிறையில் கம்பி எண்ணியது போல, மம்தாவும், அவரின் மருமகனும், சிறைவாசம் அனுபவிக்கும் நாள் வெகு துாரத்தில் இல்லை என்பது மட்டும் நிதர்சனம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
04-ஆக-202214:34:55 IST Report Abuse
தஞ்சை மன்னர் கருத்து
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
02-ஆக-202217:52:33 IST Report Abuse
DVRR ஏன் மம்தாவிடம் ரூ 2,30,000 கோடி சொத்து உள்ளது என்று யாருக்குமே தெரியாதா என்ன கட்சி ஆஃபீசில் 2010 ல் கூட்டி பெருக்கிகொண்டிருந்தவள் 2011 ல் புது கட்சி ஆரம்பித்து இந்த வாழ்வு
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஆக-202217:39:14 IST Report Abuse
Ramesh Sargam இப்பவே வந்திடுச்சு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X