நாடு முழுதும் அமலாகிறது: 'பால ஆதார்' வினியோகம்

Updated : ஆக 02, 2022 | Added : ஆக 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான, 'பால ஆதார்' வழங்கும் திட்டத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.இதையடுத்து, இதை நாடு முழுதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நாடு முழுதும் உள்ளோருக்கு, ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், பலன்கள், சலுகைகள், மானியங்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான, 'பால ஆதார்' வழங்கும் திட்டத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.இதையடுத்து, இதை நாடு முழுதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.



latest tamil news




நாடு முழுதும் உள்ளோருக்கு, ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், பலன்கள், சலுகைகள், மானியங்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளி விபரங்களின்படி, நாளொன்றுக்கு எட்டு கோடி ஆதார் தொடர்பான பரிவர்த்தனைகள் நடக்கின்றன.

இந்நிலையில், 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, பால ஆதார் வழங்கும் முன்னோடி திட்டம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை, 1.6 கோடி பேருக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நீல நிற அட்டையில் குழந்தைகளின் விபரங்கள் அச்சடிக்கப்படும். வழக்கமான ஆதாரில், பதிவு செய்வோரின் கைவிரல் ரேகை, கண்விழி உள்ளிட்டவை பதிவு செய்யப்படும்.ஆனால், பால ஆதாரில்இவை பதிவு செய்யப்படாது. குழந்தையின் பெற்றோரின் ஆதாரின் அடிப்படையில் இவை வினியோகிக்கப்படுகின்றன.ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் சரியான முறையில் சென்றடையும் வகையில், பால ஆதார் வழங்கப்படுகிறது.


latest tamil news




5 வயதுக்குப் பின், அவர்களுக்கு வழக்கமான ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும்.இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மாநில பதிவாளர்களின் உதவியுடன், குழந்தைகள் பிறக்கும்போதே, பிறப்பு சான்றிதழ் வழங்கும்போது பால் ஆதார் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202216:20:00 IST Report Abuse
2ம் ஸ்டிக்கர் மன்னன் அட போங்க இருக்கும் ஆதாரில் உள்ள தப்புகளை (தப்பான என்ட்ரி போட்டா அரசு அலுவலர்களை ஒன்னும் சொல்லலைங்க) மாற்றுவதற்கு எவ்வளவு தடுமாற வேண்டியிருக்கு
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
02-ஆக-202211:40:24 IST Report Abuse
N. Srinivasan பதினாறு வயதிற்கு மேல் உள்ள மக்களுக்கு இனிமேல் ஆதார் வழங்கக்கூடாது என்ற சட்டம் வர வேண்டும். அப்போது தான் வெளிநாட்டவர்களின் ஊடுருவல் தடுக்கமுடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X