திமுக குற்றம்சாட்டும் அதானியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: உண்மையை போட்டு உடைத்த நிர்மலா சீதாராமன்

Updated : ஆக 03, 2022 | Added : ஆக 02, 2022 | கருத்துகள் (154) | |
Advertisement
புதுடில்லி: தொழிலதிபர் அதானி குறித்தும் குற்றம்சாட்டும் தி.மு.க., ஆளும் தமிழக அரசு அதானியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அவருடன் இணைந்து தகவல் மையம் அமைப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.லோக்சபாவில், விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில் தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசும் போது, இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு தொழிலதிபர்
adani, அதானி, Nirmala sitharaman, financeminister, fmnirmalasitharaman, gst, tamilnadu, gst council, dmk, kanimozhi,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தொழிலதிபர் அதானி குறித்தும் குற்றம்சாட்டும் தி.மு.க., ஆளும் தமிழக அரசு அதானியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அவருடன் இணைந்து தகவல் மையம் அமைப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

லோக்சபாவில், விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில் தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசும் போது, இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு தொழிலதிபர் உலகத்திலேயே நான்காவது பெரும் பணக்காரராக உள்ளார். பில்கேட்சை தாண்டி ஒரு இடத்தில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். அதனால், சில பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
காரணம், அந்த கார்ப்பரேட் தொழிற்துறைகளுக்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. நாங்கள் தொழில் வளர்ச்சி வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால், அடித்தட்டிலேயே, வாழும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயங்கக்கூடிய இந்த ஆட்சி இப்படி இருக்க் கூடிய கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு, அவர்களை வளர்த்தெடுத்து வார்த்தெடுத்து கொண்டு இருக்கக் கூடிய ஆட்சி இங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார்.


latest tamil newsஇதன் பிறகு நிர்மலா சீதாராமன் பேசும்போது, பெரிய பெரிய அம்பானி, அதானிக்கு மட்டும் தான் நீங்க் எல்லாம் செய்வதாக குற்றம்சாட்டுகிறீர்கள். உங்க, தமிழகத்தில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இதற்கு 35 ஆயிரம் கோடி மதிப்பாகும். அதானியுடன் சேர்ந்து டேடா சென்டர் அமைக்கிறது. மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு உதவுவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் தங்கள் ஆளும்மாநிலங்களில் அந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்குவது ஏன். ராஜஸ்தான் அரசு, மின்சாரம் தயாரிப்புக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


வெளிநடப்புஅமைச்சர் பேசும் போது திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் முழக்கம் எழுப்பியபடி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


கோபம்
latest tamil newsதிமுக வாக்குறுதிகள் குறித்து நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு பேசும் போது, திமுக , காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
அப்போது கோபமடைந்த நிர்மலா சீதாராமன் கூறும்போது, நீங்கள் பேசும் போது, நான் அமைதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். பிறகு நான் பேசும்போது, நீங்கள் ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள். நான் பேசுவதை நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்.


தமிழக நிதியமைச்சர் விளக்கம்


நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள விளக்கம்: நவம்பர் 2021ல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே, தமிழக அரசு ஆகஸ்ட் 2021ல் பெட்ரோல் மீதான வரியில் மூன்று ரூபாய் குறைத்துள்ளது. மேலும் மத்திய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. அதாவது பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. எனவே தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி ரூ.5 குறைக்கப்படும் என்று கூறியதில், ரூ.4.95 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசு மீன்வளத்துறையிலும், போக்குவரத்து துறையிலும் கூடுதலாக டீசல் மானியம் வழங்கி வருகின்றது.

கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீது தனது வரியை பலமுறை உயர்த்தியதால், மத்திய அரசுக்கு வருவாய் பல லட்சம் கோடி உயர்ந்திருந்தாலும், அதற்கேற்ப மாநில அரசுகளின் வருவாயில் உயர்வு ஏற்படவில்லை. ஏனெனில், மாநில அரசுகளுடன் பகிரக்கூடிய கலால் வரியை குறைத்து, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 23.42 ரூபாயாகவும் (247 சதவீதம்), டீசல் மீதான வரியை 28.23 ரூபாயாகவும் (790 சதவீதம்) கடந்த ஏழு ஆண்டுகளில் உயர்த்தி வந்துள்ளது. ஆனால், பெட்ரோல் மீதான வரியை 13 ரூபாயாகவும், டீசல் மீதான வரியை 16 ரூபாயாகவும் குறைந்துள்ளது. 2014ம் ஆண்டிலிருந்த வரிகளை ஒப்பிடும்போது, தற்போது பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.10.42ம் (110 சதவீதம்), டீசல் மீது லிட்டருக்கு ரூ.12.23ம் (342 சதவீதம்) இன்னும் அதிகமாகவே உள்ளது. 2021 நவம்பரில் மத்திய அரசின் வரி குறைப்பால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,050 கோடியும், மே 2021ல் வரி குறைப்பால் ஆண்டுக்கு சுமார் ரூ.800 கோடியும் வருவாய் இழப்பு ஏற்படும்.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாநிலங்களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவில் குறைந்துள்ளது. மாநிலங்கள் தங்களது வருவாயை பெருக்குவதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை. எனவே மத்திய அரசு வரிச்சுமையை குறைக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (154)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
03-ஆக-202214:18:06 IST Report Abuse
S.Ganesan GST போடப்பட்டதால் மாநிலத்தில் உள்ள வணிக வரி அலுவகத்தில் போதிய வருமானம் இல்லை. அதாவது அதிகாரிகளுக்கு மேல் வருமானம் இல்லை. மேலும் வணிக வரி சோதனை சாவடி என்ற பெயரில் லாரி ஓட்டுனர்களை அலைக்கழித்ததும், அவர்களிடமிருந்து காசு வசூல் செய்வதும் அறவே நின்று போய் விட்டது. மேலும் பில் இல்லாத வியாபாரம் எனபதும் தடுக்கப்பட்டு விட்டது. முன்பு இருந்த VAT வரி பற்றி எதனை பேருக்கு தெரியும்? வாட் வரிக்கு மேல் சர்சார்ஜ், education cess, green cess, Auto cess, MRP, அதற்கு மேல் Sales Tax, Surcharge on Sales tax, கேளிக்கை vari என்று எத்தனை வரிகள் இருந்தன என்று எத்தனை பொது மக்களுக்கு தெரியும்? அதில் வரி ஏய்ப்பு எவளவு நடந்தது யாருக்கு தெரியும் ?இப்போது எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து GST என்ற ஒரு பெயரில் கொண்டு வைத்தது மட்டும் அல்லாமல் பல இடங்களில் வரி குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம். மேலும் வணிக வரி அலுவகத்திற்கு ஓடி அலைந்து வரி கட்டி வியாபாரம் செய்ய முடியாமல் அவஸ்தை பட்ட எத்தனையோ நிறுவனங்கள் இப்போது உட்கார்ந்த இடத்திலேயே GST செலுத்தி விட்டு நிம்மதியாக இருக்கிறார்கள். பல லட்சம் லஞ்சம் நின்று பொய் விட்டது. இப்போது தெரிகிறதா திமுகவின் குற்றச்சாட்டுக்கு காரணம் ?
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
03-ஆக-202211:41:29 IST Report Abuse
sankar கனிமொழி பேசும் பொய்யுரை எல்லாமே தெரிந்தே கேட்டுக்கொண்டு இருந்தார் இந்திய தேசத்தின் நிதி அமைச்சர் - ஆனால் நிர்மலாஜி பேசிய உண்மை சுட்டவுடன் தெறித்து ஓடிவிட்டார் - கூட்டத்துடன்
Rate this:
Cancel
Chandra - Chennai,இந்தியா
03-ஆக-202209:57:54 IST Report Abuse
Chandra ஆகையால் நிர்மலா வாகிய நான் சொல்லுவது என்னவென்றால் நீங்களும்(மாநில அரசு) அதானி, அம்பானி யை பணக்காரர் அக்குறிங்க நாங்களும் ஆக்குரோம் ..குட். சூப்பர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X