நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

Updated : ஆக 03, 2022 | Added : ஆக 02, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி
National Herald Office, ED, Searched, நேஷனல் ஹெரால்டு, அலுவலகம், அமலாக்கத்துறை, அதிகாரிகள், சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது. இந்த நிலையில், காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது மகனும் காங்., - எம்.பி.,யுமான ராகுல் ஆகியோரையும் அமலாக்கத் துறை விசாரித்துள்ளது. இதை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.latest tamil newsஇந்நிலையில், டில்லியில் உள்ள ஐ.டி.ஓ.,வில் அமைந்திருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆக.,2) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவுக்குப் பிறகே தகவல்கள் வெளிவரும் என்கிறார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
02-ஆக-202220:11:14 IST Report Abuse
a natanasabapathy Ippadiye yeththanai kaalathukku thaan sothanai pottukkonde iruppeerkal. Seekkiram mudiththu thandanai vaanki kodunkal.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
02-ஆக-202218:53:08 IST Report Abuse
r.sundaram உள்ளதும் போச்சுதாடா நொள்ளைக்கண்ணா, என்பதுபோல் அந்த ஐம்பது லட்சமும் கோவிந்தா தானா? அதிக ஆசை அதிக நஷ்ட்டம்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
02-ஆக-202216:08:00 IST Report Abuse
S.Baliah Seer நேஷனல் ஹெறால்ட் பத்திரிகையை யங் இந்தியா வாங்கியது குற்றமா என்ன? அதற்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
02-ஆக-202220:24:22 IST Report Abuse
vadiveluகுற்றம் வாங்கியதில் இல்லை, அதன் பங்குதாரர்களை ஏமாற்றியதில்,அந்நிய செலாவணியை கையாண்டதில், ஹவாலா முறையியில் பணத்தை கை மாற்றியதில், பல கோடி மதிப்புள்ள சொத்தை சில ஆயிரங்களை வாங்கியதில்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X