இது உங்கள் இடம்: தமிழர்களை தலைகுனிய வைத்து விட்டனர்!

Updated : ஆக 03, 2022 | Added : ஆக 03, 2022 | கருத்துகள் (113) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்ஆர்.என்.ராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியின் துவக்க விழாவில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றது, தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும்
44வது சர்வதேச, செஸ் ஒலிம்பியாட், ஸ்டாலின், பிரதமர் மோடி படம், தலைகுணிவு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneஉலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


ஆர்.என்.ராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியின் துவக்க விழாவில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றது, தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் விதமாக அமைந்தது.

உண்மையிலேயே, இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி, ரஷ்ய நாட்டில் நடைபெற்றிருக்க வேண்டும்; உக்ரைனுடனான போர் காரணமாக, அங்கு நடக்கவில்லை. போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு, இந்தியாவுக்கு வந்த போது, பிரதமர் மோடி பெருந்தன்மையாக, அதை தமிழகத்தில் நடத்த அனுமதி கொடுத்தார்.


latest tamil newsஇந்த வாய்ப்பை தமிழகத்திற்கு வழங்கிய பிரதமருக்கு, தமிழக மக்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், கழக ஆட்சியாளர்கள் இந்தப் போட்டிக்கான விளம்பரங்கள் விஷயத்தில் கேவலமாக நடந்து கொண்டனர் என்றால் ஆச்சர்யமில்லை. செஸ் போட்டி தொடர்பான அனைத்து சுவரொட்டிகள், பேனர்கள், பதாகைகளில் திட்டமிட்டு, முதல்வர் ஸ்டாலின் படத்தை மட்டும் போட்டு விட்டு, பிரதமரின் படம் இடம் பெறாமல் செய்து விட்டனர்.


latest tamil newsஇதை அறிந்தவுடன் பா.ஜ., கட்சியினர், எங்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டுள்ளதோ, அதற்கு பக்கத்தில் பிரதமரின் படத்தை ஒட்டும் இயக்கத்தை துவங்கினர். உடன், நாகரிகமே தெரியாத, ஓசி சோற்றில் உயிர் வளர்க்கும், திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட சில கட்சியினர், பிரதமரின் படத்தின் மீது, தார் பூசியும், கரி பூசியும் அவமதித்தனர்.

செஸ் போட்டி தொடர்பான பேனர்களில், பிரதமரின் படம் இடம் பெறவில்லையே ஏன் என, அமைச்சர் ஒருவரிடம் கேட்ட போது, 'பா.ஜ., கட்சி தான் இந்தக் கேள்வியை கேட்கும். மக்கள் யாரும் கேட்க மாட்டார்கள். போட்டியில் பங்கேற்க பல நாடுகளில் இருந்து வருவோரைத் தான் நாம் வரவேற்க வேண்டும்; பிரதமரை எதற்கு வரவேற்க வேண்டும்' என, பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார்.

அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றமோ, 'செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரத்தில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் படங்கள் வெளியிடப்படுவதை, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்' எனக்கூறி, தமிழக அரசுக்கு குட்டு வைத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினை, நம் நாட்டிலேயே பல மாநிலத்தவருக்கு தெரியாது; ஆனால், பிரதமர் மோடி பற்றி உலக நாடுகள் பலவும் அறியும். அப்படிப்பட்ட நிலையில், பிரதமரின் படத்துடன், முதல்வர் ஸ்டாலின் படத்தை போட்டிருந்தால், இவர் தமிழக முதல்வர் என்றாவது பலருக்கு புரிந்திருக்கும். அது நிகழாமல், திராவிட செம்மல்கள் தங்கள் தலையில், தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர்.

எனவே, இனி வரும் காலங்களிலாவது, அரசு இயந்திரம் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதை, முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும். மரியாதை தருவதில் பெயர் பெற்ற தமிழகத்திற்கு, மாநில அரசுக்கு, 'பிரதமருக்கு உரிய மரியாதையை தாருங்கள்' என, நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டது அவமானமாக உள்ளது.

இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்க தவறிய, முதல்வர் ஸ்டாலின் செயல், ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைத்து விட்டது; இனியாவது திருந்தினால் சரி!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
07-ஆக-202214:51:02 IST Report Abuse
Sampath Kumar இந்தியாவிடம் எல்லாம் செஸ் அமைப்பினர் கேக்க வில்லை நேரடிக தமிழநாடு முதல்வரிடம் கேட்டார்கள் அவரும் உடனே சரி என்று சொல்லி பின்னர்தான் ஒன்றிய அரசுக்கு அன்பிவைக்க பட்டது
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
03-ஆக-202220:08:12 IST Report Abuse
Dhurvesh நம்ப மாட்டேன் என்கிறார்கள் :::: சீமான்
Rate this:
Cancel
03-ஆக-202219:12:45 IST Report Abuse
Surya krishnan 100 true
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X