முதல்வரின் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் கோயிலில் யாகம் : 3 மணி நேரம் பக்தர்கள் அவதி

Updated : ஆக 03, 2022 | Added : ஆக 03, 2022 | கருத்துகள் (64) | |
Advertisement
திருச்செந்தூர் :முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு யாகம் நடத்தினார். தடுப்பு அரண் அமைத்து யாகம் நடந்ததால் பொதுமக்கள் வள்ளி குகைக்கு செல்ல முடியாமல் 3 மணி நேரம் அவதிக்குள்ளாயினர்.இக்கோயிலில் வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகள் சத்ரு சம்ஹார யாகம் நடத்துவர். கோயில் வளாகத்தில் சில ஆண்டுகளாக யாகம் நடத்த
 முதல்வர்,  மருமகன் சபரீசன்  திருச்செந்தூர், யாகம்

திருச்செந்தூர் :முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு யாகம் நடத்தினார். தடுப்பு அரண் அமைத்து யாகம் நடந்ததால் பொதுமக்கள் வள்ளி குகைக்கு செல்ல முடியாமல் 3 மணி நேரம் அவதிக்குள்ளாயினர்.

இக்கோயிலில் வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகள் சத்ரு சம்ஹார யாகம் நடத்துவர். கோயில் வளாகத்தில் சில ஆண்டுகளாக யாகம் நடத்த அனுமதியில்லை. இதனால் தாங்கள் தங்கியிருக்கும் பகுதியிலேயே யாகம் நடத்துகின்றனர். சென்னையில் நிலம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய தொழிலதிபர்களுடன் சபரீசன் நேற்று நடந்த யாகத்தில் கலந்து கொண்டார்.latest tamil newsஇக்கோயிலில் இருந்து வள்ளி குகை செல்லும் கடற்கரையை ஒட்டிய சிறிய பாதையை வழிமறித்து சாமியானா பந்தல் அமைத்து காலை 7:00 முதல் 10:00 மணி வரை யாகம் நடந்தது. இதனால் பக்தர்கள் யாரும் வள்ளி குகைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. யாகம் நடந்த பகுதியை சுற்றி பாதுகாப்பு ஊழியர்கள், ஹிந்து அறநிலையத்துறையினர் இருந்தனர். ஹிந்து முன்னணி, பா.ஜ., ஆலய மேம்பாட்டு குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு பக்தர்கள் கூடியதால் சலசலப்பு ஏற்பட்டது. யாகம் முடிந்ததும் வடக்கு வாசல் வழியாக சபரீசன் தரப்பினர் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aanmeega Kaavi Sangar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஆக-202214:26:21 IST Report Abuse
Aanmeega Kaavi Sangar Nadar திருச்செந்தூரில் சபரீசன் சத்ரு சம்ஹார யாகம். சத்ரு யாரு?
Rate this:
Cancel
raja - Doha,கத்தார்
06-ஆக-202211:54:56 IST Report Abuse
raja திராவிடம் பள்ள இளிக்குதுங்கோவ்........ நீங்களும் உங்கள் திராவிட மாடலும்.....
Rate this:
Cancel
Muralidharan S - Chennai,இந்தியா
04-ஆக-202209:44:00 IST Report Abuse
Muralidharan S எல்லா பாவங்களையும் செய்துவிட்டு, யாகம் செய்வது, இவர்கள் ஆண்டவனுக்கே லஞ்சம் குடுப்பது போல இருக்கிறது.. யாகத்தின் பலன் புண்ணிய காரியங்களையே செய்துவரும் பக்தர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். இவர்கள் செய்யும் யாகம், ஆண்டவனிடத்தில் வியாபாரம். பணத்தை விட்டெறிந்து ஆண்டவன் அருள் எல்லாம் பெறமுடியாது.. ஆண்டவன் அருள் கண்டிப்பாக பாவ காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்றுமே கிடைக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X