விநாயகருடன் தங்கக்கட்டி: பிரிட்டன் அரசு வெளியீடு

Added : ஆக 03, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த 'ராயல் மின்ட்' நிறுவனம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.ஐரோப்பாவில் பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த ராயல் மின்ட் நிறுவனம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிட்டது.அதுபோல ஆக 31ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர்
UK,Ganesh, gold bar,Royal mint

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த 'ராயல் மின்ட்' நிறுவனம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.ஐரோப்பாவில் பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த ராயல் மின்ட் நிறுவனம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிட்டது.அதுபோல ஆக 31ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.24 காரட் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட இந்த தங்க கட்டியின் எடை 20 கிராம். இதன் விலை ஒரு லட்சத்து 6543 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


வலைதளம் வாயிலாக தங்கக் கட்டிக்கு பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாலட்சுமி உருவம் பொறித்த தங்கக் கட்டியை வடிவமைத்த எம்மா நோபல் என்பவர் தான் விநாயகர் உருவத்துடன் கூடிய தங்கக் கட்டியை வடிவமைத்துள்ளார். வேல்ஸ் பிராந்தியத்தின் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலைச் சேர்ந்த நிலேஷ் கபாரியா விநாயகர் தங்க கட்டியை வடிவமைக்க உதவியுள்ளார்.'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்' என ராயல் மின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

pottalam nool - AtheAthe,இந்தியா
03-ஆக-202214:26:47 IST Report Abuse
pottalam nool பிஜேபி ஊழல் பணம் பூரா லண்டனில் குவிகிறது என்று தெரிகிறது
Rate this:
Soumya - Trichy,இந்தியா
03-ஆக-202218:41:55 IST Report Abuse
Soumyaஇன்னும் அம்பது வருஷத்துக்கு இப்புடியே தா இருக்கனும்...
Rate this:
Cancel
DUBAI- Kovai Kalyana Raman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஆக-202212:46:57 IST Report Abuse
DUBAI- Kovai Kalyana Raman தங்கம் விற்கும் யுக்தி. அஷ்டே....ஜைஹிந்த் புறம் அப்துல் காதர் .. சவூதி Meka and medina படம் போட்டு விற்றால், விற்கும் யுக்தி இல்லையா?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-ஆக-202209:05:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அதுவும் யுக்தி தான் .....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-ஆக-202211:39:50 IST Report Abuse
Ramesh Sargam தமிழகத்தில் உள்ள ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் அவர்களிடம் இருந்து கட்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X