'4ஜி' கட்டணத்தை உயர்த்தி '5ஜி'க்கு மாற்றும் உத்தி
'4ஜி' கட்டணத்தை உயர்த்தி '5ஜி'க்கு மாற்றும் உத்தி

'4ஜி' கட்டணத்தை உயர்த்தி '5ஜி'க்கு மாற்றும் உத்தி

Updated : ஆக 03, 2022 | Added : ஆக 03, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: 5ஜி இணைப்புக்கான கட்டணத்திற்கு பெரிதளவு வித்தியாசம் இல்லாத வகையில் 4ஜி கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களை 5ஜி சேவைக்கு மாற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த திங்கள் அன்று, ‛5ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் முடிவு பெற்றதை அடுத்து, அடுத்தகட்டமாக, தொலைதொடர்பு நிறுவனங்கள், கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கும் என,
'4ஜி' கட்டணத்தை உயர்த்தி '5ஜி'க்கு மாற்றும் உத்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 5ஜி இணைப்புக்கான கட்டணத்திற்கு பெரிதளவு வித்தியாசம் இல்லாத வகையில் 4ஜி கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களை 5ஜி சேவைக்கு மாற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கள் அன்று, ‛5ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் முடிவு பெற்றதை அடுத்து, அடுத்தகட்டமாக, தொலைதொடர்பு நிறுவனங்கள், கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கும் என, தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம், 1.5 லட்சம் கோடி ரூபாயுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஏலம் எடுப்பதற்காக ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிடத்தக்க அளவிலான தொகையை செலவு செய்துள்ளன.latest tamil news

இதன் காரணமாக, அந்த செலவை ஈடுகட்டும் விதமாக, தொலைபேசி மற்றும் பிராட்பேண்டு சேவைகளுக்கான கட்டணத்தை, மீண்டும் ஒருமுறை நிறுவனங்கள் அதிகரிக்க கூடும். அடுத்து, 4ஜி சேவைக்கும் 5ஜி சேவைக்கும் இடையே கட்டணத்தில் வித்தியாசம் அதிகம் இருப்பின், வாடிக்கையாளர்களை ஈர்ப்பது சிரமமாக இருக்கும். இதனால், தற்போது சேவையில் இருக்கும் 4ஜி இணைப்புக்கான கட்டணத்தை அதிகரிக்க நிறுவனங்கள் முயற்சிக்கும். பெரிய அளவில் கட்டண வித்தியாசம் இல்லை எனும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் 5ஜி சேவைக்கு மாற முன்வருவர்.கட்டண உயர்வை பொறுத்தவரை, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நான்கு சதவீத உயர்வை நிறுவனங்கள் அறிவிக்க கூடும். அல்லது, நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி., / 4ஜி இணைப்புக்கான கட்டணத்தில், 30 சதவீத உயர்வை அறிவிக்க கூடும். நிறுவனங்களை பொறுத்து, கட்டண உயர்வு குறித்த முடிவுகள் வேறுபடக்கூடும். ஆனால், கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

03-ஆக-202216:24:24 IST Report Abuse
அப்புசாமி கார்ப்பரேட்கள் 1.5 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கும். அந்த ஏலத்தொகையைக் கட்ட வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும். வங்கிகள் மக்களின் டிபாசிட்டை அதிக வட்டிக்கு கார்ப்பரேட்களுக்கு கடன் குடுக்கும். 5 ஜி சேவையை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி உருவுவாங்க. கெவர்மெண்ட்டுக்கு கட்டவேண்டியதைக் கட்டிட்டு மீதியை சுருட்டிப்பாங்க.
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
04-ஆக-202213:04:12 IST Report Abuse
Neutralliteஇதே தான் எல்லா தொழிலிலும் நடக்கும்...என்ன இங்க ஏலம், அங்க வேற மாதிரி அவ்ளோ தான்....
Rate this:
Cancel
Venkat - Chennai,இந்தியா
03-ஆக-202210:43:17 IST Report Abuse
Venkat போன வாரம் தான் புது மொபைல் (4G) எடுத்தான், இப்ப 5G க்கு மாற சொல்றிங்க ..என்ன பான்னனும் தெரில, நம்ம JI ய பாத்து பண்ண சொல்லுங்க ,
Rate this:
RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
03-ஆக-202213:23:59 IST Report Abuse
RAMAKRISHAN NATESAN     பின்னர் இதற்கு தானே மோடி ஆசை பட்டார், எல்லோரும் என் 100 கோடி மக்கள் புது PHONE வாங்கணும் அப்போ தான் அந்த CEL கம்பெனி எல்லாம் எலெக்டரால் BOND கொடுப்பான் அனால் இது உலகில் வராது, கார்பொரேட் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இது தான் மோடி...
Rate this:
kumar - chennai,இந்தியா
03-ஆக-202215:59:49 IST Report Abuse
kumarஅதான் ஒரு வருடமா சொல்லிட்டு தானே இருந்தாங்க நீ என்ன paper படிச்ச ?? கடந்த இரண்டு வருடமாவே 5G phone market கிடைக்குதுல வாங்க வேண்டியது தானே...
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
03-ஆக-202210:23:41 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam காங்கிரஸ் திமுக ஆட்சியில் 8000 கோடிக்கு எலம் விட்டது 2.5 G எதிர்பார்க்கப்பட்ட மதிப்பு 1,76,000 கோடி பாஜக ஆட்சியில் 1,50,000 கோடிக்கு 5 G ஏலம் விட்டுள்லது
Rate this:
03-ஆக-202212:19:32 IST Report Abuse
ஆரூர் ரங்2 ஜி வந்த போது ஒரு ஜி பி டேட்டா 198 ரூபாய். இப்போ தினம் ஒன்றரை ஜி பி கொடுக்கறாங்க. அதிக விலைக்கு அலைக்கற்றையை வாங்கினால் எப்படி டேட்டா 😛தரமுடியும்? அப்போ இருந்த 2 ஜி போன் விலையில் இப்போது 4 ஜி செல்போன் கூட வாங்கலாம். காலம் மாறிப் போச்சு...
Rate this:
RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
03-ஆக-202213:25:31 IST Report Abuse
RAMAKRISHAN NATESAN     முதலில் 60 என்று தொடண்டி இன்று மாதம் 284 க்கு குறைவா எந்த SCHEME இல்லை இதில் நீ பெருமை வேறு பேசுகிற போடா...
Rate this:
kumar - chennai,இந்தியா
03-ஆக-202216:02:56 IST Report Abuse
kumarஇந்த விலைய முதலில் கூட்டியது Airtel தானே போய் கேளு அவன்கிட்ட...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X