5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை குறைந்தது ஏன்?: '2ஜி புகழ்' ராசா கேட்கிறார்

Updated : ஆக 03, 2022 | Added : ஆக 03, 2022 | கருத்துகள் (275) | |
Advertisement
சென்னை: 5ஜி ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட ரூ.5 லட்சம் கோடி தொகையை விட குறைவாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் ஏலம் சென்றுள்ளதாகவும், எஞ்சிய பணம் எங்கே சென்றது என மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என ‛2ஜி' அலைக்கற்றை ஏலம் தொடர்பான வழக்கில் சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக எம்.பி., ஆ.ராசா கூறியுள்ளார்.5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த நிலையில், முகேஷ் அம்பானி
5G Auction, ARaja, DMK, 2G, MP, Spectrum, 5ஜி, எஞ்சிய பணம், மத்திய அரசு, ஏலம், திமுக, எம்பி, ஆ ராசா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 5ஜி ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட ரூ.5 லட்சம் கோடி தொகையை விட குறைவாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் ஏலம் சென்றுள்ளதாகவும், எஞ்சிய பணம் எங்கே சென்றது என மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என ‛2ஜி' அலைக்கற்றை ஏலம் தொடர்பான வழக்கில் சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக எம்.பி., ஆ.ராசா கூறியுள்ளார்.



5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த நிலையில், முகேஷ் அம்பானி தலைமையிலான 'ரிலையன்ஸ் ஜியோ' அதிக தொகைக்கு ஏலம் கோரி, முதலிடத்தை பிடித்தது. மொத்தமாக 5ஜி ஏலத்தில் நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏலம் துவங்குவதற்கு முன்னதாக சுமார் ரூ.4.3 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது.



latest tamil news

‛2ஜி' அலைக்கற்றை ஏலம் தொடர்பான வழக்கில் சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக எம்.பி., ஆ.ராசா இந்த 5ஜி ஏலம் தொடர்பாக கூறியதாவது: 2ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பின் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று கூறினார்கள். ஆனால் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம்போகும் என்று மத்திய அரசே கூறியது. ஆனால் ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் ஏலம் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது என்பது பற்றி மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும். 5 ஜி ஏலம் முறையாக நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (275)

S.Viswanathan - Chennai,இந்தியா
09-ஆக-202218:36:29 IST Report Abuse
S.Viswanathan அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் :"டெலிகாம் வியாபாரம் பலவீனமாக இருப்பதால் முழு அலைக்கற்றையும் விற்பனை ஆகவில்லை. விற்றது போக மிச்சம் சுமார் மூன்று லட்சம் கோடி பெறுமானமுள்ள அலைக்கற்றை அரசாங்கத்தின் கையில் இருக்கிறது" என்று. அதனால் ஊழல் ஒன்றும் நடக்கவில்லை என்பது உறுதியாகிறது.
Rate this:
Cancel
Venkat - Mumbai,இந்தியா
09-ஆக-202201:20:34 IST Report Abuse
Venkat ராஜா அவர்களே... நீங்கள் என்ன சொன்னாலும் அதை புரிந்துகொள்ள கூட இயலாத கூட்டம்...
Rate this:
Cancel
Venkat - Mumbai,இந்தியா
09-ஆக-202201:18:53 IST Report Abuse
Venkat இதையே காங்கிரஸ் செய்திருந்தால் இமாலய ஊழல், தேசத்துரோகம் என்று கூச்சலிட்டிருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X