சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆவினுக்குச் சொந்தமான 28 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இதன் மூலம், 1 லிட்டர், அரை லிட்டர் என குடிநீர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆவின் பால் பாக்கெட்களில் சினிமா விளம்பரங்கள் வெளியிடவும் பரீசிலனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அதிமுக ஆட்சியில், அம்மா குடிநீர் என்ற பெயரில் குடிநீர் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.