சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்

Updated : ஆக 03, 2022 | Added : ஆக 03, 2022 | |
Advertisement
டிஜே நினைவு புகைப்பட போட்டி, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி ஜெயவர்த்தனவேலுநினைவாக நடத்தப்பட்டு வருகிறது. டாக்டர் டிஜே அவர்களின் புகைப்பட விருப்பத்தின் நினைவாக இது கொண்டாடப்படுகிறது. புகைப்பட போட்டியின்முதலாவது பதிப்பு 2012 ல் நடந்தது. இதற்கு கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து, தற்போது 11 வது பதிப்பாக




latest tamil news


டிஜே நினைவு புகைப்பட போட்டி, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் டி ஜெயவர்த்தனவேலுநினைவாக நடத்தப்பட்டு வருகிறது. டாக்டர் டிஜே அவர்களின் புகைப்பட விருப்பத்தின் நினைவாக இது கொண்டாடப்படுகிறது. புகைப்பட போட்டியின்முதலாவது பதிப்பு 2012 ல் நடந்தது. இதற்கு கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து, தற்போது 11 வது பதிப்பாக நடத்தப்பட்டுள்ளது.


latest tamil news


போட்டிக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு இந்த ஆண்டு 2022 மே 1 முதல் ஜூன் 30 வரை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. போட்டியில்7517 படங்கள் இடம் பெற்றிருந்தன. உலகம் முழுவதும் 36 நாடுகளிலிருந்து 1620 பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டு “இயற்கையின் படைப்பு”,


latest tamil news


Advertisement

“சூரிய உதயம் - சூரிய அஸ்தமனம்” என, இரு தலைப்பு களில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு,


latest tamil news


அவர்களது முயற்சியை பாராட்டி சான்றிதழ்களுடன் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு பிரிவிலும் தேர்வு பட்டியலில் இடம் பெற்ற 10 பேருக்குபரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன.


latest tamil news


புகைப்பட கலையில் நிபுணத்துவம் பெற்ற பெங்களுருவை சேர்ந்த கணேஷ் எச் சங்கர், மும்பையை சேர்ந்த கேதர் கோரே, திருச்சூரை சேர்ந்தப்ரவீன் மோகன்தாஸ் உள்ளிட்டோர் அடங்கிய நடுவர் குழு அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்தன. . கே. மருதாச்சலம் போட்டியின்ஆலோசகராக செயல்பட்டார். போட்டியின் நிர்வாகியாக விக்ரம் சத்யாநாதன் செயல்பட்டார்.


latest tamil news


போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற படங்கள் கண்காட்சியும் விமரிசையாக நடத்திமுடிக்கப்பட்டது.


latest tamil news


-எல்.முருகராஜ்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X