2047-ல் உலகின் தலைவராக இந்தியா மாறி இருக்கும்: கவர்னர் ரவி பெருமிதம்

Updated : ஆக 03, 2022 | Added : ஆக 03, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
ஈரோடு: ''இந்தியா உலகின் தலைமை பொறுப்பை ஏற்கும் போது, உலகமே நமது குடும்பமாக மாறும். 75 ஆண்டு சுதந்திர தினவிழாவில், நமது சுதந்திரப்போராட்ட வீரர்களையும், சிறந்த தலைவர்களையும் போற்ற வேண்டும். அடுத்த, 25 ஆண்டுகளில், 2047-ல் உலகின் தலைவராக இந்தியா மாறி இருக்கும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.ஈரோடு மாவட்டம் அறச்சலுார் ஜெயராமபுரத்தில் கொங்கு சமூக ஆன்மீக கல்வி, கலாச்சார
Governor,India,ஆளுநர்,இந்தியா,கவர்னர்

ஈரோடு: ''இந்தியா உலகின் தலைமை பொறுப்பை ஏற்கும் போது, உலகமே நமது குடும்பமாக மாறும். 75 ஆண்டு சுதந்திர தினவிழாவில், நமது சுதந்திரப்போராட்ட வீரர்களையும், சிறந்த தலைவர்களையும் போற்ற வேண்டும். அடுத்த, 25 ஆண்டுகளில், 2047-ல் உலகின் தலைவராக இந்தியா மாறி இருக்கும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.ஈரோடு மாவட்டம் அறச்சலுார் ஜெயராமபுரத்தில் கொங்கு சமூக ஆன்மீக கல்வி, கலாச்சார அறக்கட்டளை மற்றும் தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில், தீரன் சின்னமலை, 217வது நினைவேந்தல் விழா நேற்று நடந்தது. முன்னாள் ஐ.ஏ,எஸ். அதிகாரி ராஜா ஆறுமுகம் வரவேற்றார். கொங்கு சமூக ஆன்மீக கல்வி, கலாச்சார அறக்கட்டளை தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், துணை தலைவர் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பழனி சாது சுவாமிகள் திருமடத்தின் மடாபதிபதி சாது சண்முக அடிகளார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவுக்கு தலைமை வகித்து, தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:

சிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை. இந்திய சுதந்திர போராட்டத்தில் தன் உயிரை தியாகம் செய்தார். நாட்டின் விடுதலைக்காக வாழ்விழந்து, ரத்தம் சிந்தியவர்களை மறக்க கூடாது. நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை நாம் மறக்க கூடாது. சிறந்த பாரதத்தை உருவாக்குவதே நாம் அவர்களுக்கு செய்யும் நன்றி கடனாகும். தமிழ் மிக பழமையான, சக்தி வாய்ந்த மொழி. தமிழில் தொடர்ந்து பேச வேண்டும் என்பது விருப்பம்.தொலை நோக்கு பார்வை

இந்த மாபெரும் தலைவரின் பன்முகத்தன்மையை இன்னும் நாம் முழுமையாகப் பாராட்டவில்லை என நான் நினைக்கிறேன். தீரன் சின்னமலை சிறந்த தலைவர், போர் வீரர் மட்டுமல்லாது, தொலைநோக்கு பார்வையாளராகவும் இருந்தார். ராணுவ பலமும், பொருளாதார வளம் மட்டும் நமக்கு போதும் என்று நினைக்காமல், அறிவுசார் வளர்ச்சியும் தேவை என தீரன் சின்னமலை நினைத்தார். அதனால், இந்த மண்ணின் அறிஞர்களை, கவிஞர்களை அவர் ஊக்குவித்தார். தர்மத்தின் பாதுகாவலராகவும் புரவலராகவும் விளங்கினார்.latest tamil news


சேர, சோழ, பண்டியர்களால் நாட்டின் பெருமைக்குரிய பாரம்பரியக் கோவில்கள் கட்டப்பட்டன. பிரமாண்டம், அழகு, சிறந்த கட்டிட கலை கொண்ட இந்த கோவில்களுக்கு இணையாக, கிரேக்கம் உள்ளிட்ட உலகின் எந்த கட்டிகலையையும் ஒப்பிட முடியாது. அப்போது இங்கு தோன்றிய தர்மம், நாடு முழுவதும் வெளிச்சமாய் பரவியது. தீரன் சின்னமலையும் இந்த தர்மத்தை பின்பற்றினார். குலதெய்வ குல வழிப்பாட்டை தொடர்ந்தார்.
சனாதான தர்மம்

இந்நாட்டின் ஆன்மா, இந்த தர்மத்தில் தான் வாழ்கிறது. உலகின் பழமையான மொழி தமிழ் மொழி. உலகின் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். துரதிஷ்டவசமாக வரலாற்றில் திரிபுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இறுதியில் உண்மை வெல்லும். சிலப்பதிகாரத்தில் பாரதம் குறித்தும், இந்து தர்மம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கையில் இருந்து மதுரை வரை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனாதான தர்மத்தை போலவே, இத்தகைய விலைமதிப்பற்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்களை அழிக்க முடியாது. நாம் யார், எப்படி வளர்ந்தோம் என்பதை சத்தமாகவும், தெளிவாகவும் இந்த நூல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தீரன் சின்னமலை குலதெய்வ வழிபாட்டின் மூலம், பாரதத்தின் ஆன்மாவை பாதுகாத்தார். உலகளாவிய சகோதரத்துவத்தைத்தான், சனாதனம், கலாச்சாரம், தர்மம் என்று சொல்கிறோம். உலகின் உயர்ந்த கடவுள் நம் அனைவருள்ளும் வாழ்கிறார் என்றுதான் வேதம் சொல்கிறது. ஒரே கடவுள் தன்னை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார். நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். இதுதான் இந்த தர்மத்தின் சாராம்சம்.
உலகின் தலைவராக இந்தியா

இந்தியா உலகின் தலைமை பொறுப்பை ஏற்கும் போது, உலகமே நமது குடும்பமாக மாறும். 75 ஆண்டு சுதந்திர தினவிழாவில், நமது சுதந்திரப்போராட்ட வீரர்களையும், சிறந்த தலைவர்களையும் போற்ற வேண்டும். அடுத்த, 25 ஆண்டுகளில், 2047-ல் உலகின் தலைவராக இந்தியா மாறி இருக்கும்.

உலகில் தீவிரவாதம், போர், பொருளாதார ஏற்றதாழ்வு அதிகரித்து, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில், போரை ஆதரிக்காத, போரை நடத்தாத இந்தியாவை உலகம் தலைமை தாங்க எதிர்பார்க்கிறது. உலகில் உதவி தேவைப்படும் நாடுகளுக்கெல்லாம் உதவும் நாடாக இந்தியா மட்டுமே உள்ளது. 75 வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் நாம், தீரன் சின்னமலையின் கனவுப்படி, பொருளாதார வளம், ராணுவ பலம், அறிவுசார் வளர்ச்சி பெற்ற, தர்மத்தை காக்கும் நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.

இந்த நாடு மக்களால், இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. 2014-க்கு முன் பல்வேறு கட்டுப்பாடுகளாக, 400 ஸ்டார்ட் அப் (புதிய தொழில் தொடங்குவோர்) இருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, 8,000 கோடிக்கு மேல் மதிப்புடைய, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொழில்களை தொடங்க இளைஞர்கள் முன்வந்துள்ளனர். நமது நாட்டின் இளைஞர்கள் தங்கள் திறமையினால், பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
முதல் நாடாக இந்தியா

சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சிச் கொண்ட மூன்று நாடுகளாக உள்ளன. ஜப்பான் போன்ற நாடுகள் கூட பின்தங்கி விட்டன. நமது இளைஞர்களின் உழைப்பால், இந்த மூன்றில் முதல் நாடாக இந்தியா வரும். இந்திய மக்கள் ஒரு குடும்பமாக இருப்பதால் அனைவருக்குமான வளர்ச்சி கிடைக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202221:14:56 IST Report Abuse
அப்புசாமி அப்துல் கலாம் சொன்ன மாதிரி எல்லோரும் கனவு காணுங்க.... இவரு 25 வருஷக் கனவு. இன்னொருத்தர் நூறாண்டுக்கான பட்ஜெட். 25 வருஷத்துக்கு முன்னாடி இப்பிடி இருப்போம்னு யாரும் கனவு காணலை. அடுத்த ரெண்டு வருஷத்துக்குக் கூட என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. இவரை அட்வான்சா பெருமிதப் படறாரு.
Rate this:
Cancel
03-ஆக-202220:05:12 IST Report Abuse
மதுமிதா பாதுகாப்பும் ஆன்மீகமும் இந்தியாவில் இரண்டறகலந்திருப்பதை திரு கவர்னர் ரவி அவர்கள் பதவிக்கு வந்தது முதல் புரிந்து கொண்டோம் மகிழ்ச்சி ஜி
Rate this:
Cancel
03-ஆக-202219:59:19 IST Report Abuse
முருகன் மக்களை மயக்கும் வித்தை தெரிந்த தலைவர்கள் இப்போது நாட்டில் அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X