வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'தி.மு.க., - எம்.பி., கனிமொழி, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு முதல் முயற்சியாக, மது ஆலை மற்றும் டாஸ்மாக்கில் நடக்கும் ஊழலை ஒழிக்க புறப்படட்டும்' என, தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பண மதிப்பிழப்பை அமல்படுத்திய பின், கறுப்பு பணமே இல்லாமல் ஆகிவிடும் என அறிவித்தனர்.
![]()
|
ரூ.5,400 கோடி
அதன்பிறகும் நாட்டில் கறுப்பு பணம் எப்படி உலவுகிறது என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, பார்லி மென்டில் கேள்வி எழுப்பிஉள்ளார்.'எங்கும் ஊழல், எதிலும் ஊழல்' என்ற திராவிட மாடல் ஆட்சியால் தான், கறுப்பு பணம் உலவுகிறது.தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளில் விற்கும், ஒவ்வொரு பாட்டிலுக்கும், 10 முதல் 20 ரூபாய் கூடுதலாக, 'குடி'மகன்களிடம் இருந்து பெறப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது, ஒரு கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. அதன்படி ஒரு நாளைக்கு 'குடி'மகன்களிடம் இருந்து, 15 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆண்டுக்கு, 5,400 கோடி ரூபாய். இதுவே கறுப்பு பணம்.
![]()
|
பதுக்கல்
மேலும், பயன்படுத்திய பாட்டில்கள் வழியே, பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் உலவுகிறது.தமிழக நிதி அமைச்சர் மார்ச் மாதத்தில் கூறியபடி, 50 சதவீதம் மது விற்பனை, கலால் வரி இல்லாமல் நடக்கிறது என்றால், 33 ஆயிரம் கோடி வருவாய், கணக்கில் வராமல் பதுக்கப்படுகிறது.அப்படியானால், மது நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு, கணக்கில் வராத வர்த்தகத்தை மேற்கொண்டுஉள்ளனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தி.மு.க.,வினர் நடத்தும், மது ஆலைகளை மூடிவிடுவோம் என, கனிமொழி கூறினார். அதன்படி செய்யாவிட்டாலும், குறைந்தது அந்த ஆலைகளை, கலால் வரி செலுத்தி, அரசுக்கு வருவாயை பெருக்க சொல்வாரா?இதுவே, நாட்டில் கறுப்பு பணம் எப்படி உலவுகிறது என, கனிமொழி கேட்ட கேள்விக்கு, பா.ஜ., அளிக்கும் பதில்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.