ஊட்டி- -ஊட்டியில் பெய்த கனமழையின் போது, பல இடங்களில் வெள்ளம் தேங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. ஊட்டியில், நேற்று மதியம் ஒரு மணியளவில் துவங்கிய கனமழை, 3:00 மணி வரை நீடித்தது.
சேரிங்கிராஸ், ஊட்டி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் போக்குவரத்து பாதித்தது. ஊட்டி ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. நீலகிரி கலெக்டர் அம்ரித் கூறுகையில், ''நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், 42 மண்டல குழுக்கள் அமைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், 456 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் வசிக்கும் பகுதியில் பாதிப்பு இருந்தால், வருவாய் துறையை அணுகி நிவாரண முகாம்களில் தங்கலாம்,'' என்றார்.