வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஜூலை மாதத்தில் சற்று குறைந்துள்ளது. மேலும், வர்த்தக பற்றாக்குறை மூன்று மடங்குஅதிகரித்து உள்ளது.
![]()
|
கடந்த ஜூலையில், ஏற்றுமதி 0.76 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இம்மாதத்தில் 2.78 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஜூலையில் 2.81 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஏற்றுமதி 0.4 சதவீதம் சரிவைக் கண்டது. அதன் பின், இப்போது தான் சற்று சரிவு ஏற்பட்டிருக்கிறது.இறக்குமதியை பொறுத்தவரை, கடந்த ஜூலையில், 43.59 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையில் 3.65 லட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி ஆகியிருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜூலையில் 5.23 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், கடந்த ஜூலையில் அதிகம் இறக்குமதி ஆகியுள்ளதாக, மத்திய வர்த்தக துறை தரவுகள் தெரிவிக்கின்றன.நிலக்கரி இறக்குமதியும் 164 சதவீதம் அதிகரித்துள்ளது. தாவர எண்ணெய் இறக்குமதி 47.18 சதவீதம் அதிகரித்துள்ளது.ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்ததை அடுத்து, கடந்த ஜூலையில், வர்த்தகப் பற்றாக்குறை 2.45 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
![]()
|
கடந்த ஆண்டு ஜூலையில் இது, 83 ஆயிரத்து, 977 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது வர்த்தக பற்றாக்குறை, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.கடந்த ஜூலையில் பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள், தங்க ஆபரணங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி சரிவைகண்டுள்ளது.பணவீக்கத்தை கட்டுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ரஷ்யா தொடுத்த போர் காரணமாக வினியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தடைகள் போன்றவற்றையும் மீறி, 2.78 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடைபெற்றிருப்பதாக, வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.