‛'அம்மா'வுக்கு பதில் ‛ஆவின்' குடிநீர்! பால் வளத் துறை முடிவு

Updated : ஆக 04, 2022 | Added : ஆக 04, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை : 'அம்மா' குடிநீர் திட்டத்தை போல, 'ஆவின்' குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, பால் வளத் துறை முடிவெடுத்துள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், பயணியருக்கு குறைந்த விலையில் குடிநீர் கிடைப்பதற்காக, 'அம்மா குடிநீர் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான தொழிற்சாலை, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில், போக்குவரத்து துறை வாயிலாக அமைக்கப்பட்டது. இங்கு உற்பத்தி
Amma Water Bottle, aavin, Water Bottle,அம்மா,ஆவின்,குடிநீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : 'அம்மா' குடிநீர் திட்டத்தை போல, 'ஆவின்' குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, பால் வளத் துறை முடிவெடுத்துள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில், பயணியருக்கு குறைந்த விலையில் குடிநீர் கிடைப்பதற்காக, 'அம்மா குடிநீர் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான தொழிற்சாலை, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில், போக்குவரத்து துறை வாயிலாக அமைக்கப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட 1 லிட்டர் குடிநீர் பாட்டில், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


latest tamil news



தற்போது, அம்மா குடிநீர் திட்டத்தை போன்று, ஆவின் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, பால் வளத் துறை முடிவெடுத்துள்ளது.ஆவின் நிறுவனத்திற்கு பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படும் 28 பண்ணைகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு, முதற்கட்டமாக 1 லிட்டர், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட உள்ளன. ஆவின் பாலகங்கள், குளிர்பான கடைகளில், அவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
04-ஆக-202219:16:41 IST Report Abuse
sankaseshan அம்மாவை ஒழித்து கட்டிவிட்டு அய்யாவை தூக்கி நிறுத்தும் முயற்சி . பால் பாக்கெட் கலீல் தண்ணீரை வசதியாக கலக்கலாம்
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
04-ஆக-202217:37:48 IST Report Abuse
Mohan இரண்டும் இரண்டறக் கலக்காமல் இருந்தால் கழகத்துக்கு நல்லது.
Rate this:
Cancel
C G MAGESH - CHENNAI,இந்தியா
04-ஆக-202215:03:59 IST Report Abuse
C G MAGESH ஆவின் பாலில் அளவு குறைந்தால், ஆவின் தண்ணீர் வாங்கி கலந்து கொள்ளலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X