ரூ.30 கோடி நில மோசடி வழக்கு: டி.ஆர்.ஓ., உள்பட 5 பேர் கைது

Added : ஆக 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வடகால் மற்றும் பால்நல்லூரில் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட ரூ.30 கோடி நிலத்தை ரத்து செய்து மோசடி செய்ததாக டி.ஆர்.ஓ., உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.வடகால் மற்றும் பால்நல்லூரில் தனியார் நிறுவனம் ஒன்று வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவுகள் அமைத்தது. இதில் 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வடகால் மற்றும் பால்நல்லூரில் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட ரூ.30 கோடி நிலத்தை ரத்து செய்து மோசடி செய்ததாக டி.ஆர்.ஓ., உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.



வடகால் மற்றும் பால்நல்லூரில் தனியார் நிறுவனம் ஒன்று வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவுகள் அமைத்தது. இதில் 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய கமிஷனருக்கு 1991 ல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து பொதுப்பயன்பாட்டுக்கு வழங்கியது. அந்த நிலங்களை அமலதாஸ் ராஜேஷ் என்பவர் மோசடி செய்து விற்றது தெரியவந்தது.



இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., வேல்முருகன் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்தனர். பொது உபயோகத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தை ரத்து செய்து உடந்தையாக செயல்பட்டதாக டி.ஆர்.ஓ., ஆக பணிபுரிந்து தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் ராஜேந்திரன் 54, நில எடுப்பு தாசில்தார் எழில்வளவன் 50, ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பி.பார்த்தசாரதி 33, காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைப்பதிவாளராக பணிபுரிந்து வரும் ராஜதுரை 41, உதவியாளர் பெனடினை 54, சி.பி.சி.ஐ.டி.,யினர் கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
04-ஆக-202211:40:19 IST Report Abuse
jayvee ஹிந்து அறநிலையத்துறைக்கான சொத்துக்கள் எப்படி கொள்ளை அடிக்கபட்டன.. அடிக்கப்படுகின்றன என்பதை தெளிவாக காட்டுகிறது.. திராவிட கழ அரசு ஏன் ஹிந்து கோவில்களை விடுவிக்க மறுக்கின்றன என்பதையும் இதன் மூலம் சூடு சுரனையுள்ள ஹிந்துக்கள் புரிந்துகொள்ளலாம்.. ஏன், பல கிருத்துவர்கள் மதம் மாறியும், அரசுக்கும் அதை தெரிவிக்காமல், தங்கள் பெயரிலும் எது மாற்றம் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதையும் இதன் மூலம் அறியலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X