சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உள்ளதைக் காட்டும் 'ஸ்டிக்கர்'

Added : ஆக 04, 2022 | |
Advertisement
உடற்பயிற்சி செய்பவரின் தசைகள் எப்படி இருக்கின்றன என்பதை நேரலை காட்சியாக பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? தாயின் வயிற்றில் குழந்தை வளர்வதை நேரடியாக மருத்துவரால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்?இதற்கெல்லாம் உதவும் ஒரு கருவியை, அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 'அல்ட்ரா சவுண்டு ஸ்டிக்கர்'
அல்ட்ரா சவுண்டு ஸ்டிக்கர், மாசாசூசெட்ஸ் , டிரான்ஸ்டியூசர்கள் , Ultrasound Sticker, Massachusetts, Transducers,

உடற்பயிற்சி செய்பவரின் தசைகள் எப்படி இருக்கின்றன என்பதை நேரலை காட்சியாக பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? தாயின் வயிற்றில் குழந்தை வளர்வதை நேரடியாக மருத்துவரால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்?

இதற்கெல்லாம் உதவும் ஒரு கருவியை, அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 'அல்ட்ரா சவுண்டு ஸ்டிக்கர்' எனப்படும் அந்த சிறிய கருவியை, உடல் மீது வைத்தால், 48 மணி நேரத்திற்கு, உள்ளிருக்கும் பாகங்களை அப்படியே வெளியே காட்டும்.

தோலைத் தாண்டி, செவி உணரா ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்பி, அதை திரும்பப் பெரும் நுாற்றுக்கணக்கான டிரான்ஸ்டியூசர்கள் இந்த ஸ்டிக்கரில் உள்ளன. உடலோடு ஒட்டுவதற்கேற்ற எலாஸ்டோமர் பட்டியும், அதன் மேல் ஹைட்ரோஜெல் பசையும் இருக்கின்றன.

ஸ்டிக்கரிலுள்ள மீஒலி டிரான்ஸ்டியூசர்கள் உடலின் உள்ளுறுப்புகளை துல்லிமாக படம்பிடித்து வெளியே உள்ள திரையில் காட்டும்.இக்கருவி வயர்கள் இணைப்பின் மூலமே செயல்படுகிறது. விரைவில், கம்பியின்றி, தொலைவில் உள்ள மருத்துவரும் உறுப்புக்களை பார்க்கும் வசதி வந்துவிடும் என எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X