மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி வாராந்திர விரைவு ரயில், இனி போத்தனுாரில் நின்று செல்லும்என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு கட்டண விரைவு ரயில், போத்தனுாரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.இந்த கோரிக்கையை ஏற்று, இந்த வாராந்திர ரயில், நாளை முதல் போத்தனுாரில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement