கனியாமூர் பள்ளி மாணவியின் சிசிடிவி காட்சி: தாய் சந்தேகம்

Added : ஆக 04, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி, கடந்த, 13ம் தேதி தரைத்தளத்தில் இறந்து கிடந்தார். மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், அதிகாலை நான்கு பேர் கீழே கிடந்த மாணவியை துாக்கிச் செல்வது போன்ற 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி பரபரப்பை
கனியாமூர் சக்தி பள்ளி, மாணவி ஸ்ரீமதி,கள்ளக்குறிச்சி மாணவி மரணம், சிசிடிவி, Kaniyamur Shakti School, student Srimathi, Kallakurichi student death, CCTV,

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி, கடந்த, 13ம் தேதி தரைத்தளத்தில் இறந்து கிடந்தார். மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், அதிகாலை நான்கு பேர் கீழே கிடந்த மாணவியை துாக்கிச் செல்வது போன்ற 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சிகள் தொடர்பாக மாணவியின் தாய் செல்வி கூறியதாவது: இன்று சிசிடிவி காட்சிகளை வெளியிடுவோர் ஜூலை 13ம் தேதியே காண்பித்திருக்கலாம். எங்களிடம் 13ம் தேதி 3:30 மணிக்கு ஒரு நிமிட சிசிடிவி காட்சியை காண்பித்தார்கள். அதில் எனது மகளை தூக்கிச் செல்வது போன்று எதுவுமே இல்லை. சிசிடிவி காட்சிகளை யார் வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இப்போது வெளியான காட்சிகள் அப்பட்டமான பொய்யான ஒன்று. எனது மகள் கீழே விழும் காட்சிகளுடன் வீடியோ வெளியிட்டிருந்தால் சந்தேகம் தீர்ந்திருக்கும். ஆனால் அதனை மறைத்து துண்டு துண்டாக வீடியோவை வெளியிடுகின்றனர். எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
05-ஆக-202215:54:09 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு நம்பும் இடமாக இல்லையே ? இந்த கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது. அரசுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் நடக்கும் போது கால்களில் சிக்கிய எறும்பு போல
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
04-ஆக-202221:25:41 IST Report Abuse
sankar இந்த அம்மா தினசரி ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார் - யாரோ இயற்றியதை இவர் ஒப்பிக்கிறார் என்று நினைக்கிறேன் - இவரது வருத்தம் யாருக்கு உபயோகப்படுகிறது
Rate this:
Cancel
04-ஆக-202218:32:45 IST Report Abuse
பேசும் தமிழன் ஏதேனும்... மிகப்பெரிய புள்ளி இதில் சம்பந்த பட்டிருக்கிறார்கள் என்று என்ன தோன்றுகிறது.... ஒரே மர்மமாக உள்ளது!!! பாவம் அந்த பெண்!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X