இ.கம்யூ., மாநில மாநாடு திருப்பூரில் 4 நாள் நடக்கிறது| Dinamalar

இ.கம்யூ., மாநில மாநாடு திருப்பூரில் 4 நாள் நடக்கிறது

Added : ஆக 04, 2022 | |
இந்திய கம்யூ., கட்சியின், 25வது மாநில மாநாடு, திருப்பூரில், வரும் 6ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.மன்னார்குடியில் இருந்து எடுத்துவரப்படும் செங்கொடி வரவேற்புடன், வரும் 6ம் தேதி மாநாடு துவங்குகிறது. மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார். மாலையில், வித்யா கார்த்திக் மண்டபத்தில், சமூக நல்லிணக்க பாதுகாப்பு - மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு

இந்திய கம்யூ., கட்சியின், 25வது மாநில மாநாடு, திருப்பூரில், வரும் 6ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.



மன்னார்குடியில் இருந்து எடுத்துவரப்படும் செங்கொடி வரவேற்புடன், வரும் 6ம் தேதி மாநாடு துவங்குகிறது. மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார். மாலையில், வித்யா கார்த்திக் மண்டபத்தில், சமூக நல்லிணக்க பாதுகாப்பு - மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு நடக்கிறது.



பொதுசெயலாளர் ராஜா துவக்கி வைக்கிறார்; எம்.பி., சுப்பராயன் வரவேற்கிறார். மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலை வகிக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். காங்., மாநில தலைவர் அழகிரி, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உட்பட, கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.



வரும், 7ம் தேதி அறிக்கைகள் மீதான விவாதம்; 8ம் தேதி மாநிலக்குழு, கட்டுப்பாட்டு குழு நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. நிறைவாக, 9ம் தேதி மாலை 4:00 மணிக்கு, திருப்பூர் பத்மினி கார்டனில், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X