தமிழகத்தில் நிரம்பி ததும்பும் அணைகள்: ஆறுகளில் கரைபுரளும் வெள்ளம்

Updated : ஆக 04, 2022 | Added : ஆக 04, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.நீலகிரியில் மழை கொட்டுது நீலகிரியில், இரண்டாவது ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை, 8:00 மணி நிலவரப்படி, ஓவேலி, 59 மி.மீ., கூடலூர், 49 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சராசரியாக, 15.95 மி.மீ., மழை
தமிழகம், மழை, நீர்மட்டம், அணை,

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.நீலகிரியில் மழை கொட்டுது


நீலகிரியில், இரண்டாவது ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை, 8:00 மணி நிலவரப்படி, ஓவேலி, 59 மி.மீ., கூடலூர், 49 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சராசரியாக, 15.95 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. ரெட் அலர்டையொட்டி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை முதல் மழை தொடர்வதால், மலை காய்கறி, தேயிலை தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.அணைகளில் நீர்மட்டம் உயர்வு


மாவட்ட முழுவதும், 13 அணைகள், 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. தென் மேற்கு பருவ மழையால் குந்தா, கெத்தை, மாயார் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியது, பிற அணைகள், 80 சதவீதம் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மழை பாதிப்பு பகுதிகளை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார், கலெக்டர் அம்ரித், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.
ஆழியாறு அணை


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை நீர்மட்டம் 116 அடியை எட்டியது. இதனால், அணைக்கு வரும் 2,125 கன அடி நீர் முழுவதும் 9 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.latest tamil news
மேட்டூர் அணை


காவிரியின் நீர்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,85,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120. 23 அடியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும், 1,77,000 கன அடி நீரும் வந்து கொண்டுள்ளது.அதிகளவில் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூர் சங்கிலி முனியப்பன் கோவில் அருகே மேட்டூர் எடப்பாடி சாலையில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், அலுவலகம் செல்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறையினர், நீர்வளத்துறை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வைகை அணை

தேனி மாவட்டம் வைகை அணை நிரம்பியதை தொடர்ந்து, அணைக்கு வரும் 2,400 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.latest tamil newsபரிசல் இயக்க தடை

கர்நாடகாவில் காவிரியாற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், தமிழக எல்லையான பிலி குண்டுலுவுக்கு தற்போது 1,75,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 25 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.


இதனிடையே, கர்நாடக அணைகளில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 83 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 68,100 கன அடியும், கபினி அணையில் 15 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.குற்றாலத்தில் குளிக்க தடை


மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக தொடர்கிறது.


ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 8.70 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 14.93 அடியும் உயர்ந்துள்ளது.நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்பாபநாசம்

உச்சநீர்மட்டம் : 143 அடி


நீர் இருப்பு : 84அடி


நீர் வரத்து : 7733.33 கன அடி


வெளியேற்றம் : 1004.75கன அடிசேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி


நீர் இருப்பு : 117.78 அடி


நீர்வரத்து : இல்லை


வெளியேற்றம் : இல்லைமணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118


நீர் இருப்பு : 73.15 அடி


நீர் வரத்து : 139கனஅடி


வெளியேற்றம் : 55 கன அடிவடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50அடி


நீர் இருப்பு: 8.75அடி


நீர் வரத்து: இல்லை


வெளியேற்றம்: 10 கன அடிநம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி


நீர் இருப்பு: 12.49 அடி


நீர்வரத்து: இல்லை


வெளியேற்றம்: இல்லைகொடுமுடியாறு:


உச்சநீர்மட்டம்: 52.25 அடி


நீர் இருப்பு: 42 அடி


நீர்வரத்து: இல்லை


வெளியேற்றம்: 2 கன அடிமழை அளவு:

பாபநாசம்:15 மி.மீ


சேர்வலாறு :6 மி.மீ


மணிமுத்தாறு:7.2 மி.மீ


அம்பாசமுத்திரம்:4 மி.மீ


சேரன்மகாதேவி:4.4 மி.மீ


களக்காடு :1.2 மி.மீ


பாளையங்கோட்டை:4 மி.மீ


நெல்லை:4.6 மி.மீ
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி


நீர் இருப்பு : 74அடி


நீர் வரத்து : 488கன அடி


வெளியேற்றம் : 60 கன அடிராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி


நீர் இருப்பு : 82 அடி


நீர்வரத்து : 131 கன அடி


வெளியேற்றம் : 60 கன அடிகருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி


நீர் இருப்பு : 48.89 அடி


நீர் வரத்து : 35 கன அடி


வெளியேற்றம் : 5 கன அடிகுண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி


நீர் இருப்பு: 36.10 அடி


நீர் வரத்து: 135 கன அடி


வெளியேற்றம்: 135 கன அடிஅடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி


நீர் இருப்பு: 103 அடி


நீர் வரத்து :165 கன அடி


நீர் வெளியேற்றம்: 5 கன அடிமழை அளவு :

கடனா : 18 மி.மீ


ராமா நதி : 6 மி.மீ


கருப்பா நதி :12 மி.மீ


குண்டாறு :62 மி.மீ


அடவிநயினார் :31 மி.மீ


ஆய்குடி :2 மி.மீ


செங்கோட்டை:7 மி.மீ


தென்காசி :4 மி.மீ


சிவகிரி :3 மி.மீநாமக்கல்


latest tamil news


காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி கரையோரம் உள்ள சந்தைப்பேட்டை, ஜனதா நகர், சத்யா நகர், பாவடிதெரு, மீனவர் தெரு மற்றும் பல பகுதிகளில் சுமார் 30க்கு மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகளும் நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட வருகிறது. ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் அதிகரிதுள்ளதால் ஆற்றோரம் பகுதியில் நகராட்சி அதிகாரியிலும் வருவாய் துறை அதிகாரிகளும் போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆற்றில் குளிக்கவும் துணி துவைக்கவும் பரிசளிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.ஈரோடு

ஈரோடு மாவட்டம் பவானி உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. இதனால் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


பல அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளிலும் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-ஆக-202217:42:13 IST Report Abuse
Natarajan Ramanathan கோவில்களிலாவது குளங்கள் இருக்கிறது ஏதாவது ஒரு சர்ச் அல்லது மசூத்தியில் குளம்அமைத்து ஊருக்கு ஏதேனும் நல்லது செய்கிறார்களா?.….
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
04-ஆக-202215:59:30 IST Report Abuse
r.sundaram தமிழகம் புதிய அணைகளை கட்ட முடியா விட்டால், செயற்கையாக நீர்தேக்கங்களை உருவாக்க முயற்ச்சிக்க வேண்டும். நீர்த்தேக்கங்கள் உருவாகும் போது அந்த இடத்தில் நிலத்தடி நீர் செறிவு ஏற்படும். ஆதலால் கிணறு, ஆழ்துளைக்கிணறு முதலியவைகளில் நீர் வளம் மேம்படும். குடிநீருக்கு பஞ்சம் வராது . முதலில் இருக்கும் நீர்த்தேக்கங்களில் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். ஆறு குட்டை குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். மனிதன் குடிநீரை காசு கொடுத்து வாங்குவதை தவிர்க்க செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
04-ஆக-202215:58:08 IST Report Abuse
krish கர்நாடக அரசு, கர்நாடகாவில் மேகதாது அணைக்கட்டு கட்டுவதற்கு, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமீப காவேரி வெள்ள சேதம்,டெல்டா மக்கள் ஆதரவுடன், தமிழக அரசு, நியாயமான நீர் பகிர்வுக்கு உட்பட்டு,சம்மதம் தெரிவிக்க ஒரு நல்ல வாய்ப்பு என்றே தோன்றுகிறது. கடலில் நீர் கலந்து விரயம் ஆகிறது என்று புலம்பியவர் ஆறுதல் அடைய ஒரு அருமையான சந்தர்ப்பம். சர்ச்சைக்குரிய மாநில அரசுகள் இந்த சமய சந்தர்ப்பத்தை நழுவ விடாது என்றே நம்பலாம். மத்திய அரசும் இயற்கை அளித்த தீர்ப்பு/ ஒரு வரப்பிரசாதம் என்று நிம்மதி பெருமூச்சு விடலாம். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X