மத்திய அரசு மீது பழிபோடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: அண்ணாமலை| Dinamalar

மத்திய அரசு மீது பழிபோடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: அண்ணாமலை

Updated : ஆக 04, 2022 | Added : ஆக 04, 2022 | கருத்துகள் (107) | |
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசை எப்படி கூற முடியும்? மத்திய அரசு மீது பழிபோடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பிரிந்துரைகளையும் ஏக மனதாக ஏற்ற பிறகே வரி அமலானது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லி.,யில் பேசிய
அண்ணாமலை, பாஜ, தமிழக அரசு, மத்திய அரசு, நிர்மலா சீதாராமன், திமுக, நிதியமைச்சர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசை எப்படி கூற முடியும்? மத்திய அரசு மீது பழிபோடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.



சென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பிரிந்துரைகளையும் ஏக மனதாக ஏற்ற பிறகே வரி அமலானது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லி.,யில் பேசிய பேச்சு 2 நாட்களாக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிராண்டட் உணவு பொருள் மீதான வரி குறித்து திமுக பல பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.



2006ல் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஜிஎஸ்டி கொண்டுவர திட்டமிடப்பட்டது. அதன்பிறகு 8 ஆண்டுகள் பல பரிமாணங்களுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014ல் கொண்டுவந்தது. ஜிஎஸ்டி கொண்டுவந்ததும் ஒவ்வொரு மாநிலமும் 14 சதவீதம் வருவாய் உயரும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது.



மத்திய அரசு தரப்பில் இருந்து தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை கடந்த மார்ச் வரை முற்றிலுமாக தரப்பட்டு விட்டது. தமிழகத்திற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை இல்லை. மாநில நிதியமைச்சரின் நேற்றைய அறிக்கை முன்னுக்கு பின் முரணாக இருந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசை எப்படி கூற முடியும்? மத்திய அரசு மீது பழிபோடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்.


latest tamil news



உ.பி., குஜராத்தை விட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. அதன் விலைகளை மத்திய அரசு குறைக்கும் போது தமிழக அரசு குறைக்காமல் குறை கூறுவதை ஏற்க முடியாது. வாட் வரியை நிர்ணயிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X