வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம். பிரதமர் மோடியைக் கண்டு பயமில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை காங்., இடைக்கால தலைவர் சோனியா மற்றும் எம்.பி., ராகுல் இயக்குநர்களாக உள்ள 'யங் இந்தியன்' நிறுவனம் வாங்கியது. இதில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்தது. இந்நிலையில், புதுடில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமையகம் மற்றும் அது தொடர்புடைய 11 இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சோதனை பநடத்தினர். சோனியா மற்றும் ராகுலுக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த சென்றனர். அவர்கள் தரப்பில் யாரும் இல்லாததால் 'ஆதாரங்களை பாதுகாப்பதற்காக' அலுவலகத்துக்கு தற்காலிகமாக சீல் வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கை தொடர்பாக ராகுல் அளித்த பேட்டி: நாங்கள் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம். பிரதமர் மோடியை கண்டு பயப்படமாட்டோம். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கு, சமூக நல்லிணக்கத்திற்கு உதவும் பணியை தொடர்வோம். அவர்கள் என்ன செய்தாலும், எங்களது பணியை தொடர்ந்து செய்வோம். உண்மையை தடை செய்ய முடியாது. இவ்வாறு ராகுல் கூறினார்.