பரந்தூரில் விமான நிலைய திட்டம்: இரட்டை வேடம் போடும் 'டிவி சேனல்கள்'

Updated : ஆக 04, 2022 | Added : ஆக 04, 2022 | கருத்துகள் (56) | |
Advertisement
சென்னை: டில்லி, மும்பை நகரங்களை ஒப்பிடுகையில், சென்னை விமான நிலையம் போதுமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்படவில்லை. அதனால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 2004ல் நிலம் தேர்வு மற்றும் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு துவக்கியது.பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக, இதற்கான அரசாணைகள் திருத்தப்பட்டு, புதிய விமான நிலையம் அமைப்பதே நிரந்தர தீர்வு என்ற நிலை உருவானது.
பரந்தூர், விமானநிலையம், டிவி_சேனல்கள், இரட்டை_வேடம், சென்னை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: டில்லி, மும்பை நகரங்களை ஒப்பிடுகையில், சென்னை விமான நிலையம் போதுமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்படவில்லை. அதனால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 2004ல் நிலம் தேர்வு மற்றும் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு துவக்கியது.
பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக, இதற்கான அரசாணைகள் திருத்தப்பட்டு, புதிய விமான நிலையம் அமைப்பதே நிரந்தர தீர்வு என்ற நிலை உருவானது. புதிய விமான நிலையத்துக்கான நிலங்களை தேர்வு செய்யும் பணி 2008ல் துவங்கியது.

ஆனால், இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆர்வமின்மை, அழுத்தமின்மை காரணமாக, தமிழக அரசு இதற்கான பணிகளில் தீவிரம் காட்டவில்லை. பின், புதிய விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு நான்கு இடங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பன்னுார் அல்லது பரந்துார் ஒட்டிய கிராமங்கள்; செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், மதுராந்தகம் அருகே படாளம் போன்ற இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன.


latest tamil news


அதில் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். இதனையடுத்து பரந்தூரில் விமான நிலையம் வரவுள்ளது உறுதியானது.
ஆனால், கடந்த அதிமுக ஆட்சியின்போது, பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு அரசு பரிந்துரைத்தபோது அங்குள்ள விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை பெரிய பெரிய செய்தியாக பல ‛டிவி' சேனல்கள் பரபரப்பாக வெளியிட்டன. பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் அதற்கு விளைநிலங்களை அளிக்க முடியாது என விவசாயிகள் தெரிவித்ததாக பேட்டிகளையும் நீட்டி முழக்கி சேனல்கள் ஒளிபரப்பின.


latest tamil news


இந்த நிலையில், அதே டிவி சேனல்கள், தற்போது திமுக ஆட்சியில் அதே பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ளதை வரவேற்று செய்தி வெளியிடுகின்றன. அதாவது, பரந்தூர் விவசாயிகள், அப்பகுதி மக்கள் இதனை வரவேற்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை நெகிழ்ச்சியுடன் தெரிவிப்பது போலவும் அதில் கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் படிக்கட்டாக விளங்கும். தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் குறிக்கோளை எட்டும் பயணத்தில் இவ்விமான நிலையம் ஒரு மைல்கல்' என முதல்வர் தெரிவிப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை இணையவாசிகள், அதிமுக ஆட்சியில் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், திமுக ஆட்சியில் அந்த விவசாயிகள் தமிழக வளர்ச்சிக்காக தங்கள் நிலத்தை மகிழ்ச்சியோடு தருகிறார்களோ' என கேட்கின்றனர். இது அதிமுக ஆட்சியில் எதிராகவும், திமுக ஆட்சியில் ஆதரவாகவும் செய்திகளை வெளியிடும் பல ‛டிவி' சேனல்களின் இரட்டை வேடத்தை அம்பலமாக்கியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C G MAGESH - CHENNAI,இந்தியா
11-ஆக-202212:40:20 IST Report Abuse
C G MAGESH ... மீடியா வேறு எப்படி செய்தி வெளியிடும் ?
Rate this:
Cancel
Chitrarasan subramani - Chennai,இந்தியா
05-ஆக-202212:17:34 IST Report Abuse
Chitrarasan subramani நீ எப்படிப்பட்ட ஆசாமி என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். ஆமாம் கேஸ் விலை 1100 ஆனது தெரியுமா? அல்லது நாங்கள் கேஸ் அடுப்பு பயன்படுத்துவது இல்லை ,கரி அடுப்பு தானா?
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
04-ஆக-202220:35:36 IST Report Abuse
Ram இந்த திருட்டு திராவிட முன்னேற்ற கழகமும் அதை நம்புவர்களும் பண்ற கூத்துக்கு அளவே இல்லை ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X