நீதிபதியை மாற்ற சொன்னது கீழ்த்தரமானது: ஓ.பி.எஸ்., மீது ஐகோர்ட் அதிருப்தி

Updated : ஆக 04, 2022 | Added : ஆக 04, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிபதியை மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது கீழ்த்தரமான செயல் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியுள்ளார்.கடந்த மாதம் 11ம் தேதி நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை கோரி பன்னீர்செல்வம், மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தனி
admk, chennai highcourt, highcourt, panneerselvam, ops, krishnanramasamy, judge, அதிமுக, சென்னை ஐகோர்ட், சென்னை உயர்நீதிமன்றம், பன்னீர்செல்வம், ஓபிஎஸ், கிருஷ்ணன் ராமசாமி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிபதியை மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது கீழ்த்தரமான செயல் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியுள்ளார்.

கடந்த மாதம் 11ம் தேதி நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை கோரி பன்னீர்செல்வம், மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும். தனி நீதிபதி இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி இந்த வழக்கு இன்று(ஆக.,4) விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என வைரமுத்து சார்பில் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அ.தி.மு.க., பொதுக்குழு குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறுகையில், நீதிபதியை மாற்ற வேண்டும் என மனு அளித்தது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல். கீழ்த்தரமான நடவடிக்கை. ஜூலை 11 தீர்ப்பில் குறிப்பிட்ட கருத்துகளை நியாயபடுத்தும் வகையில் நடவடிக்கை உள்ளது. தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். தவறு இருந்தால் தன்னிடம் முறையிட்டிருக்கலாம் என்றார்.


latest tamil newsஇதனையடுத்து தன்னை பற்றி தனிப்பட்ட கருத்துகளை கூறியதால் வேறு நீதிபதிக்கு மாற்ற மனு அளிக்கப்பட்டதாக பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
இதனிடையே, வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதியிடம், வைரமுத்து தரப்பின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், நாளை பிற்பகல் 2:15 மணிக்கு அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதியிடம் மீண்டும் முறையீடு


நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியிடம் ஓ.பி.எஸ் தரப்பில் மீண்டும் முறையிடப்பட்டுள்ளது. ‛தன்னுடைய நடவடிக்கைகள் கீழ்த்தரமானது என நீதிபதி கிருஷ்ணன் ராமசாரி விமர்சித்துள்ளார். நீதிபதியை மாற்ற வேண்டும் என கடிதம் கொடுத்துள்ள நிலையில் நாளை வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளார். எனவே நீதிபதியை மாற்றும் கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும்' என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பிரசாத் முறையிட்டார். இந்த நிலையில் கடிதத்தை பார்ப்பதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி விளக்கமளித்துள்ளார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
05-ஆக-202203:53:57 IST Report Abuse
Ramanujam Veraswamy Justice Krishnan Ramasamy crosses decency and make sweeping comments on litigants. SC has already passed comments on his judgemrnt, based on wrong understanding of SC order. It is right time, CJ of Madras High Court personally advise Justice Krishnan Ramasamy about his attitude.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
05-ஆக-202201:36:22 IST Report Abuse
M  Ramachandran அரசியல் வாதிகள் கொஞ்சம் விட்டால் நீதி பதிநீதிபதிகலையே வாடகையைக்கு அமர்த்திவிடுவார்கள் போl இருக்கிறது.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
05-ஆக-202200:41:50 IST Report Abuse
Visu Iyer குன்கா ஜி இடம் வழக்கை தரலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X